லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்த பிரபல நடிகர் மணிவண்ணனின் மகன்… ஒரு நெகிழ்ச்சி தருணம்!

image_pdfimage_print

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தவர் மணிவண்ணன்.

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார்.

சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த மணிவண்ணன் தனது இறுதி காலத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்தார்.

ஈழத்துக்கு ஆதரவான பல்வேறு போராட்டங்களில் மணிவண்ணன் பங்கேற்றிருக்கிறார்.

அந்த சமயத்தில் தனது பிள்ளையை ஈழப்பெண்ணுக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என கூறினார். சொன்னதை செய்தும் காட்டினார் மணிவண்ணன்.

லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணான அபி-க்கு தனது மகன் ரகுவண்ணணை திருமணம் பேசி முடித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரகுவண்ணன் – அபி திருமண நிச்சயம் நடந்த நிலையில் ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்தது.

ஆனால் அந்த ஜூன் மாதத்தில் தான் மணிவண்ணன் அகால மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார். இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது.

இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுவண்ணன் – அபி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை மணிவண்ணனின் உயிர் நண்பரான சத்யராஜ் முன்னின்று நடத்தி வைத்தது அப்போது பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

தற்போது ரகுவண்ணன் – அபி தம்பதிக்கு ஆத்விக் மற்றும் ஆதித்யன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.