“ஏன் மூன்று திருமணங்கள் செய்தேன்” முதல் முறை தனது திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்த வனிதா விஜயகுமார். இவர் வாழ்வில் இத்தனை சோகமா..!?

வனிதா

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா தனது திரைப்பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன் தனது வாழ்க்கையில் தான் கடந்து வந்த கரடு முரடான பாதைகள் பற்றியும் கூறி வருகிறார். அண்மையில் பிரபல யூடியூப் சேனலுக்கு வனிதா கொடுத்த பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த பல சோகங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

உங்கள் திருமண வாழ்க்கை பற்றி என்ற கேள்விக்கு…எல்லோரும் எனக்கு இரண்டு புருஷன் மூன்று புருசன் என்கிறார்கள். என் அப்பா ஒரு கதை சொல்கிறார் என் சகோதர்கள் இன்னுமொரு கதை சொல்கிறார்கள் ஆனால் என் வாழ்க்கை யாரால் வீணானது என அவர்களின் மனசாட்சியிடம் கேட்கச் சொல்லுங்கள். எனக்கு தங்கைகள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எதுவும் அறியாத வயதில் அவர்களுக்கு பிடித்த மாப்பிள்ளையை திருமணம் செய்து வைத்தார்கள்.

என் வாழ்வில் கனவுகள் இருந்தது ஆனால் எனக்கு பின் தங்கைகள் இருப்பதால் என் வாழ்க்கையை என் அனுமதி இன்றி தேர்வு செய்தார்கள். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன் ஆனால் என் மீதான அடக்கு முறையை என் மகன் பிறந்த உடனேயே ஆரம்பித்துவிட்டார்கள். பிடிக்காத வாழ்க்கையை விட்டு வெளியே வந்த என்னை பெற்றவர்களே ஒதுக்கினார்கள். என்னை துரோகி போல் பார்த்தார்கள்.

அம்மா அப்பாவின் அன்பு அன்று கிடைத்திருந்தால் இன்னொரு ஆணின் அன்பு எனக்கு தேவை பட்டிருக்காது. இதனால் என் மீது அதிக அன்பு காட்டிய ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்த வாழ்க்கையும் இரண்டு பெண் குழந்தைகளுடன் இல்லாமல் போனது. இதற்கு என் பிடிவாதமும் காரணம். முதல் ஆண் குழந்தையை என்னிடம் இருந்து பிரித்தார்கள். அந்த பயம் பெண் குழந்தைகளையும் இழந்து விடுவேனோ என்ற போராட்டம். சாதுவாக இருந்த நான் என்னை மாற்றிக் கொண்டேன்.

போராட ஆரம்பித்தேன். என்னை தவறானவளாக என் குடும்பம் சித்தரித்தது. என் ஒட்டுமொத்த சொத்தையும் பறித்துக் கொண்டார்கள். என் குழந்தைகளோடு தனித்து விடப் பட்ட நான் போராடி தோற்றாலும் மீண்டும் மீண்டும் போராடுகிறேன். என் கோபத்தின் பின்னால் உள்ள வலி உங்களுக்கு தெரிந்தால் நிச்சயம் என் மீது அனுதாப படுவீர்கள்.

அந்த அனுதாபம் எனக்கு வேண்டாம். என கண்கள் கலங்க கூறியது வனிதாவின் வாழ்க்கையை கண் முன் நிறுத்தியது. இப்போதும் சொல்கிறேன் என் குடும்பத்தின் மீது வெறுப்பு இல்லை. அவர்களிடம் இருந்து நான் எதையும் அபகரிப்பு செய்யவும் இல்லை.

என் மகனை பறித்தார்கள், என் வாழ்க்கையை பறித்தார்கள். என் சொத்தை பறித்தார்கள் இருப்பினும் நேசிக்கிறேன். எனக்கு என் தங்கைகளை மிகவும் பிடிக்கும். அதனால் தான் பிக் பாஸ் வீட்டில் லொஸ்லியாவை பிடிக்கும் அவள் என் தங்கையை போல் இருக்கிறாள், என கூறி கண்ணீர் விட்டுள்ளார்..!!