முல்லைத்தீவு முள்ளியவளை இளைஞனின் விபரீத முடிவு! கதறும் உறவுகள்!

image_pdfimage_print

முல்லைத்தீவு:

வவுனியா செட்டிகுளம் பொதுவைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தற்கொ லை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (20-10-2019) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த சி.நிரோஜன் என்ற 33 வயது இளைஞரே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோரிற்கான சிகிச்சை பிரிவில் தங்கி நின்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வைத்தியசாலையின் மலசலகூடத்திற்கு சென்று சேலைன் ஏற்றுவதற்கு பயன்படும் வயரின் மூலம் தூ க்கில்தொ ங்கி இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

குறித்த நபர் சில காலமாக மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதாக தெரிவிக்கபடுவதுடன், அதற்காக வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கபட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.