வயிற்று வ லியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி!

துபாயில் வயிற்று வ லி மற்றும் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட மூன்று வயது குழந்தையை மருத்துவர்கள் சோதித்து பார்த்த போது, உள்ளே தங்க தோடு இருப்பதை கண்டுபிடித்து, அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்துள்ளனர்.

துபாயை சேர்ந்த பெண்ணின் மூன்று வயது குழந்தை அவர்கள் வீட்டில் இருந்த தங்க மோதிரத்தை வாயில் வைத்து விளையாடியுள்ளது. இதை அந்த பெண்ணின் தாய் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில மணி நேரங்களில் அவரது மகள் வயிற்று வ லியால் அழுதுள்ளார். அதுமட்டுமின்றி மூச்சு விடுவதற்கும் சிரமப்பட உடனடியாக அவர் அருகில் இருக்கும் Sheikh Khalifa Medical City மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது குழந்தையை சோதித்து பார்த்த மருத்துவர்கள், மோதிரம் வயிற்றின் உள்ளே இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனால் அதை அறுவை சிகிச்சை முலம் சிறுமியின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

இது குறித்து Sheikh Khalifa Medical City-ன் மருத்துவர் David Root கூறுகையில், குழந்தை தங்க தோடை விழுங்கிவிட்டதாக எங்கள் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். இதனால் அவரை பரிசோதித்த போது, தோடு குடலில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நான் மற்றும் மருத்துவர்கள் ஆலோசித்து இதை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இது போன்று சிறிய வகை பேட்டரிகள், நாணயங்கள் போன்றவைகள் குழந்தைகள் தெரியாமல் விழுங்கிவிடுகின்றனர்.

இதனால் பெற்றோர் குழந்தைகளை தங்களுடைய கண்காணிப்பிலே வைத்து கொள்ள வேண்டும், கடந்த 2016 முதல் டிசம்பர் 2018-ஆம் ஆண்டு வரை(6 மாதம் முதல் 18 வயது) சுமார் 258 பேர் இது போன்று நாணயங்கள், ஏதேனும் சிறிய வகை பொருட்களை விழுங்கி சிகிச்சைக்காக வந்துள்ளதாக Sheikh Khalifa Medical City தெரிவித்துள்ளது.