இலங்கை லொஸ்லியாவுடன் காதலா? முதன் முறையாக வாய்த்திருந்த கவின்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் கொண்டாட்டம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது.

இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மேடையில் பேசும்போது கவின் இடம் லொஸ்லியாவின் காதல் பற்றி என்ன முடிவெடுத்து இருக்கீங்க? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

உடனே அனைவரும் எதிர்பார்க்காத பதிலை கவின் கூறியுள்ளார்.

எனக்கு சில கடமைகள் உள்ளது. அதனால் எனக்கு மற்றதை பற்றி எல்லாம் நினைக்க நேரமில்லை என்று கூறிய பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.

இதேவேளை, லொஸ்லியாவை விட ரசிகர்கள் தான் இவர்கள் இருவரும் சேர வேண்டும் என அதிகம் ஆசைப்பட்டார்கள்.

ஆனால், திடீரென்று கவின் பதிலை கேட்டு ரசிகர்கள் மனம் உடைந்து போயுள்ளார்கள். மேலும், லொஸ்லியா இது குறித்து இதுவரை மௌனம் காத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பிக் பாஸ் கொண்டாட்டம் தீபாவளியன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.