கல்லூரியில் திடீரென சுருண்டு விழுந்து உ யிரிழந்த மாணவி!!

உ யிரிழந்த மாணவி..

பெங்களுருவில் ராம்ப் வாக் பயிற்சியின் போது கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஷாலினி (21) என்கிற மாணவி தனியார் கல்லூரி ஒன்றில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் ஃப்ரெஷர்ஸ் தின கொண்டாட்டங்களுக்கான “ராம்ப் வாக்” நடைப்பயிற்சி, கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

அப்போது பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஷாலினி திடீரென சரிந்து விழுந்து அசைவில்லாமல் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மாணவி மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், பி ரேத பரிசோதனை அறிக்கை மற்றும் எஃப்எஸ்எல் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.