கோர விபத்து!

மின்னேரியாவில் இன்று (24-10-2019) அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் 43 பேர் படுகாயமுற்று பொலன்னறுவை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற அரச பேரூந்தும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து அதிகாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமுற்றோர் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


