புதனின் பெயர்ச்சியால் அதிக நன்மை பெற போவது இந்த 3 ராசிகள் தானாம்!

ஜோதிட சாஸ்திரங்களின்படி புதன் கிரகமும் ஒருவருடைய வாழ்வில் முக்கியம் பெற்று விளங்குகின்றது. இக் கிரகம் ஒருவரின் புத்தி ஆற்றலுடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது.

எனவே புதன் கிரகத்தின் பெயர்ச்சியானது ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

தற்போது துலாம் ராசியில் காணப்படும் புதன் கிரகமானது எதிர்வரும் 31 ஆம் திகதி அளவில் விருச்சிகத்தை நோக்கி பெயர்ச்சி அடைகின்றது.

அத்துடன் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை விருச்சிக ராசியில் இருந்து 12 ராசிகளுக்கும் பலன் கொடுக்கவுள்ளது.

இப் புதன் பெயர்ச்சியின்போது மிகவும் நன்மை பெறவுள்ள ராசிகளாக தனுசு, விருச்சிகம் மற்றும் மகரம் என்பன காணப்படுகின்றன.

தனுசு
இக் காலப்பகுதியில் இந்த ராசியினருக்கு அவர்கள் நினைத்திருந்த அத்தனை விடயங்களும் கிடைக்கப்பெறுவார்கள்.

அதாவது போதியளவு வருமானம் கிடைக்கப்பெறுவதோடு, படைப்பு மற்றும் கலைத்துறையில் சாதிப்பார்கள்.

கடந்த காலங்களில் காணப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் நீங்கப்பெற்று நல்லவை நடக்க ஆரம்பிக்கும்.

விருச்சிகம்
ஏற்கணவே ஜென்ம குரு, ஏழரைச் சனியனின் தாக்கம் என்பவற்றில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும் விருச்சிக ராசியினருக்கு அடுத்து வரும் வாரத்தில் இடம்பெறவிருக்கும் குருப்பெயர்ச்சி மற்றும் அடுத்த வருட ஆரம்பத்தில் இடம்பெறவிருக்கும் சனிப்பெயர்ச்சி என்பன சாதகமாகவே காணப்படுகின்றது.

இந்நிலையில் புதன் கிரகமும் சாதகமான இடத்திற்கு வருகின்றமை கூடுதல் பலமாகும். இக் காலப் பகுதியில் முக்கியமான பயணம் ஒன்று மேற்கொள்ள நேரிடும்.

சோர்வை விட்டு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதால் இறுதியல் நல்ல முடிவுகைளக் காணலாம்.

மேலும் இப் புதன் பெயர்ச்சியின்போது ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் கூடுதல் கவனம் எடுக்கவும்.

மகரம்
இப் புதன் பெயர்ச்சியடையும்போது மகர ராசிக்காரர்களை நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வைப்பார்.

உங்களில் உள்ள திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். இதனால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளை கண்டுபிடிப்பீர்கள்.

தகவல் தொடர்பு இக் காலப்பகுதியில் மிகவும் சிறப்பானதாக காணப்படும்.