புத்தளம் – அனுராதபுரம் வீதியில் மரத்துடன் வேன் மோதி கோர விபத்து! குழந்தை உட்பட மூவர் பலி! 8 பேர் படுகாயம்!

கோர விபத்து!

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் 4 ஆம் கட்டையில் வேனொன்று மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 3 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாத்தாண்டியா , களுத்துறை மற்றும் பங்கதெனிய பகுதிகளை சேர்ந்தவர்களே அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.