28 ஆண்டுகளாக தங்கையை கையில் சுமந்தபடி…! வாழ்த்து மழையில் அண்ணன்!

image_pdfimage_print

அண்ணன்- தங்கைபாசத்துக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருகின்றனர் கேரளாவை சேர்ந்த மனு மற்றும் மீனு.

பிறந்ததில் இருந்தே நோயால் பாதிக்கப்பட்ட மீனுக்கு நடக்க முடியாமல் போனது.

தற்போது 28 வயதாகும் மீனுவுக்கு அன்றாட பணிகளுக்கு கூட ஒருவரது துணை தேவைப்படும்.

அவரது அம்மாவின் அரவணைப்பை விட, மீனுவை செல்லமாக கவனித்து வருகிறார் அண்ணன் மனு.

நான் அவளுக்கு அண்ணன் அல்ல தந்தை என கூறும் மனு, மீனுவை கவனித்துக் கொள்வதே தன்னுடைய முதல் வேலை என்கிறார்.

இவருக்கு சமீபத்தில் ரம்யா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில். அன்றைய தினம் கூட தங்கையை தூக்கிக் சுமந்து கொண்டே திரிந்துள்ளார்.

இதை பார்த்த சிலர்வீடியோ எடுத்து வெளியிட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.