இலங்கை:

வத்தளை – ஹெந்தலை பிரதான வீதியின் வெலியமுன சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு கனரக வாகனங்களுக்கிடையில் மோட்டார் சைக்கிளொன்று சிக்குண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளின் சாரதி கனரக வாகனத்தின் சில்லில் சிக்கிபரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இந்த விபத்தில் சிக்கிய மேலும் ஒரு மோட்டார் சைக்களின் சாரதி சிறு காயங்களுக்குள்ளானதுடன், இது தொடர்பான விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் பிரதேச செய்திகளும் எமது இணையதளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பிவையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mullainews1@gmail.com

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்!
