கையில் பச்சைக்குத்திய முன்னாள் காதலரின் பெயரை திருமணத்திற்கு பின்பு ஆல்யா என்ன செய்தார்?

image_pdfimage_print

ஆல்யா மான்ஸா

ராஜா ராணி மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள் தான் சஞ்சீவ், ஆல்யா. இத்தொடரில் கணவன், மனைவியாக நடித்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஆனால் ஆல்யா மான்ஸா ஏற்கெனவே மானஸ் என்பவரை முதலில் காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட்டது. பின்பு ஆல்யா சஞ்சீவை திருமணம் செய்து தனது வாழ்க்கையினை ஆரம்பித்தார். மானஸ்சும் சுபிஷா என்ற பெண்ணை காதலித்து தற்போது திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

இவர்கள் இருவருமே ஆரம்பத்தில் காதலிக்கும் ஒருவரது பெயரை ஒருவர் கையில் பச்சைக் குத்திக்கொண்டதும், பல இடங்களுக்குச் சென்று புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிட்டனர்.

இந்நிலையில் ஆல்யா தனது கையில் மானஸ் பெயரை பச்சைக் குத்தியதை தற்போது வேறு விதமாக மாற்றியமைத்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.