சிம்ம ராசியை கண்டம் பண்ண காத்திருக்கும் சனி! தீபாவளி அன்று விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா?

சந்திரன் இந்த வாரம் கடகம், சிம்மம், கன்னி, துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசிக்காரர்கள் அக்டோபர் 25 மாலை 4.23 முதல் அக்டோபர் 27 மாலை 4.31வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

நல்லகாரியத்திற்காக திட்டமிடுபவர்கள் பணத்தை முதலீடு செய்யவும் திட்டமிடுபவர்கள் இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
இந்த வாரம் சந்திரன் உங்க ராசிக்கு சாதகமாக உள்ளது. நான்கு, ஐந்து ஆறாவது ஏழாவது வீடுகளில் சஞ்சரிக்கிறார். அம்மாவின் மேல் அதிக பாசமாக இருப்பீர்கள், அம்மாவின் அன்பு கிடைக்கும் அதே நேரத்தில் அவரின் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்க. வேலையில் உற்சாகமான மனநிலை ஏற்படும்.

ஐந்தாம் அதிபரி சூரியன் ஏழாவது வீட்டில் நீசபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் உங்கள் காதல் வாழ்க்கையில் ஜாக்கிரதையாக இருங்க. வீண் வாக்குவாதம் செய்யாதீங்க.தாயாருக்கு வெள்ளிக்கிழமை நெய்தீபம் ஏற்றி வழிபடுங்க. நல்லது நடக்கும்.

ரிஷபம்
இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சந்தோஷத்தை தரும் உங்க ராசிக்கு மூன்று, நான்கு, ஐந்தாம் ஆறாம் வீடுகளில் சஞ்சரிக்கிறார். சகோதரர்கள், அம்மாவின் பாசம் கிடைக்கும்.

ஐந்தாம் வீட்டில் உள்ள செவ்வாய் காதல் விசயத்தில் எச்சரிக்கையை ஏற்படுத்துவார். காதலன் அல்லது காதலியிடம் அமைதியாக பேசவும். அழகான மனைவி அன்பான துணைவியிடம் சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள்.

வாழ்க்கையில் எதிர்பாராத சந்தோஷங்கள் கிடைக்கும். கண்ணனை வழிபடுங்கள் கவலைகள் காணமல் போகும்.

மிதுனம்
சந்திரன் இந்த வாரம் உங்க ராசிக்கு இரண்டு மூன்று நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகமாக இருக்கும். வேலை, தொழிலில் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும்.

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். ஐந்தாவது வீட்டில் நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சூரியன் மனதில் சந்தோஷத்தை தருவார்.

சுக்கிரனால் உங்கள் காதல் வாழ்க்கை சிறக்கும். உங்கள் உறவில் சந்தோஷம் அதிகரிக்கும். காதல் உறவுகள் உற்சாகமாக மாறும். மனதிற்கு பிடித்த பரிசை கொடுத்து அன்பால் திக்குமுக்காட வைப்பார் உங்கள் அன்பிற்குரியவர்.

கடகம்
சந்திரன் இந்த வாரம் உங்க ராசியிலும் ராசிக்கு இரண்டு மூன்று நான்காம் மற்றும் ஐந்தாம் வீடுகளிலும் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு இந்த வாரம் உங்களின் பலம் அதிகரிக்கும்.

பணவரவை தருவார். உங்களின் மன தைரியமும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் உங்களின் காதல் உணர்வுகள் மனதில் நிம்மதியை தரும். நான்கில் அமர்ந்திருக்கும் சூரியன், சுக்கிரன் புதன் சந்தோஷ உணர்வுகளை தருவார்கள்.

சொத்து சுகம் அதிகரிக்கும். வீட்டை அலங்கரிப்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். கல்வியில் திறமை பளிச்சிடும். ஐந்தாவது வீட்டில் உள்ள குருவினால் உங்கள் காதல் உறவுகள் வலிமையை எற்படுத்தும். வெளிப்படையான பேச்சு உங்களின் சந்தோசத்தையும் மனதையும் உற்சாகப்படும். இந்த வாரம் எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குங்கள் நல்லது நடக்கும்.

சிம்மம்
சந்திரன் இந்த வாரம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திலும், ராசியிலும் ராசிக்கு இரண்டாவது வீட்டிலும் மூன்றாவது வீட்டிலும் சஞ்சரிக்கிறார்.

லேசான மன அழுத்தம் வரும் உடம்பில் அக்கறை செலுத்துங்கள். விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். மனைவியின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

இரண்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கும் போது பணவரவு அதிகரிக்கும். ஐந்தாவது வீட்டில் சஞ்சரிக்கும் சனி கேது உங்கள் காதல் வாழ்க்கையை கண்டம் பண்ண காத்திருக்கிறது.

எனவே காதலில் மோதல் வராமல் பார்த்துக்கங்க. பதற்றப்படாமல் பேசுங்க. உங்கள் அன்பிற்கு உரியவரின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். சந்தேகம் சஞ்சலத்தை ஏற்படுத்தும் எனவே சந்தோஷத்தை அதிகரித்து காதல் வாழ்க்கையை இனிமையானதாக மாற்றுங்கள்.

கன்னி
சந்திரன் இந்த வாரம் உங்க ராசிக்கு லாப ஸ்தானம், விரைய ஸ்தானத்திலும் ராசியிலும் இரண்டாவது வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இந்த வாரம் உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபம் வரும்.

வேலையில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் துணை கிடைக்கும். செலவுகள் வருமானத்தை விட அதிகம் கிடைக்கும். ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் போது உணர்ச்சி வசப்பட வேண்டாம். இரண்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் போது பணம் வரும். காதல் வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பீர்கள்.

பொறுமையாக இருங்கள். கோபம் வேண்டாம் அன்பாக அக்கறையாக துணையை கவனியுங்கள். நல்லது நடக்க சுக்கிரனை வெள்ளிக்கிழமைகளில் வழிபடுங்கள் நல்லது நடக்கும். காதல் துணையுடன் இன்ப சுற்றுலா சென்று வாருங்கள். இது உற்சாகமான வாரமாக அமையும். சந்தோஷம் அதிகரிக்க சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்குங்கள் நல்லது நடக்கும்.

துலாம்
சந்திரன் இந்த வாரம் உங்க ராசிக்கு தொழில் ஸ்தானம், லாப ஸ்தானம், விரைய ஸ்தானத்திலும் வார இறுதியில் உங்க ராசியிலும் சஞ்சரிக்கிறார்.

இந்த வாரம் நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. உங்க தொழில், வேலை சந்தோஷமாக இருக்கும் வருமானம் அதிகம் வரும் வார மத்தியில் செலவுகள் வந்தாலும் கிரகங்களின் சஞ்சாரத்தினால் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடும்.

பண்டிகை காலம் என்பதால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தம்பதியரிடையே அன்பும் உற்சாகமும் கூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியை கொடுத்தாலும் மனதில் சில அழுத்தங்களை தரும்.

ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து போங்க அன்பை வெளிப்படையாக தெரிவியுங்கள் அது ரொம்ப நல்லது. மேலும் நல்லது நடக்க வியாழக்கிழமை குருபகவானை வணங்குங்கள்.

விருச்சிகம்
சந்திரன் இந்த வாரம் உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானம், தொழில் ஸ்தானம், லாப ஸ்தானம், விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நீங்க எதிர்பாராத லாபங்களும், உதவிகளும் தேடி வரும்.

ஜென்ம குரு குதூகலத்தை தருவார். குடும்பத்தில் உள்ள சனி கேது சில சங்கடங்களை தருவார். வாக்கில் சனி இருப்பதால் நாக்கில் கவனமாக இருங்க. வெளிநாடு செல்வதற்கான முயற்சி செய்வீர்கள்.

இந்த வாரம் குருவின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாவது வீட்டின் மீது விழுகிறது. இதனால் உங்கள் காதல் உறவு மனதில் மகிழ்ச்சியை மலர்ச்சியை ஏற்படுத்தும். சின்னச் சின்ன சந்தோஷங்களை வெளிப்படுத்துங்கள்.

காதல் விசயங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த தருணத்தில் திருமணத்திற்கு முயற்சி பண்ணுங்க. வெற்றிக்கான தருணம் வரப்போகிறது.

தனுசு
சந்திரன் சஞ்சாரம் உங்க ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் வார தொடக்கத்தில் இருப்பதால் கவனம் தேவை, மன கலக்கத்தை ஏற்படுத்துவார். அடுத்தடுத்த நாட்களில் மனதில் சந்தோஷம் குடியேறும். எண்ணங்கள் நிறைவேறும். மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

லாப ஸ்தானத்தில் உள்ள கிரகங்களினால் நன்மைகள் ஏற்படும். பணவரவு அதிகம் கிடைக்கும். பெற்றோர்கள் உடனான உறவு சந்தோஷத்தை தரும். ஐந்தாவது வீட்டின் மீது சுக்கிரன், சூரியன் பார்வை விழுகிறது.

காதலன், காதலி உடனான நெருக்கம் கூடும். மனதில் உள்ள அன்பை அபரிமிதாக வெளிப்படுத்துங்கள். காதல் வாழ்க்கையில் கலப்படமில்லாத அன்பை பரிமாறுங்கள் மேலும் நல்லது நடக்க நன்மைகள் கிடைக்க நாராயணரை வணங்குங்கள்.

மகரம்
சந்திரன் இந்த வாரம் உங்களுக்கு நல்லதை செய்வார். ஏழாவது வீட்டில் சஞ்சரிக்கும் சந்திரன் உற்சாகத்தை தருவார். வார மத்தியில் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் சந்திரனால் ஒருவித பயமும் மனக்கலக்கமும் ஏற்படும்.

பிரச்சினைகள் தீர பயணங்களை ஒத்திவையுங்கள். வார இறுதியில் வேலைப்பளு தீரும் சங்கடங்கள் தீர்ந்து சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோர்களிடம் இருந்து அன்பான அரவணைப்பு கிடைக்கும். உங்கள் வேலையில் கவனமாக இருங்க, உற்சாகத்தோடு வேலை செய்யுங்கள் கரும ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பது வேலைப்பளுவை தரும். புத்திக்கூர்மை அதிகரிக்கும்.

இந்த வாரம் உங்க காதல் நினைவுகளும் உறவும் சாதகமான வேலையை தரும். அன்பான உறவுகளை அரவணைத்துச் செல்லுங்கள். உங்களின் நெருக்கம் அதிகரிக்கும். இந்த வாரம் அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

கும்பம்
சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சில சங்கடத்தை ஏற்படுத்தினாலும் வார இறுதியில் உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். உடலும் மனமும் உற்சாகமும் இருக்கும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்கள்.

உல்லாச பயணம் செல்வீர்கள். லாப ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் மனதில் தெம்பையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும். தொழிலில் லாபம் தரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக உணர்வீர்கள்.

ஐந்தாவது வீட்டில் உள்ள ராகு மீது லாப ஸ்தானத்தில் உள்ள சனி கேதுவின் பார்வை விழுவதால் உங்க சந்தோஷத்திற்கு சின்ன சின்ன இடைஞ்சல்கள் வரலாம். உங்களின் காதல் உணர்வுகள் உற்சாகத்தை கொடுக்கும். உங்கள் இதயம் விரும்பும் வாழ்க்கை வாழுங்கள். இந்த வாரம் சாதகமான முடிவுகளை எடுப்பீர்கள்.

மீனம்
சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் ஐந்தாவது இடத்தில் தொடங்குகிறது. ஆறு, ஏழு, எட்டாம் இடங்களில் சந்திரன் பயணிப்பதால் மனதிற்கு உற்சாகம் ஏற்படும் அதே நேரத்தில் சங்கடமும் சஞ்சலமும் ஏற்படும்.

எட்டாம் வீட்டில் உள்ள கிரகங்களினால் உடலிலும் மனதிலும் பிரச்சினை ஏற்படும். உங்களின் முடிவுகளை உணர்ச்சிபூர்வமாக எடுக்காதீர்கள், அறிவுப்பூர்வமாக எடுங்கள்.

வேலை வேலை என்று எப்போதும் பிஸியாக இருக்காதீங்க. உடம்பையும் கொஞ்சம் கவனிங்க. சந்திரன் வார துவக்கத்தில் ஐந்தாவது வீட்டில் இருக்கும் தருணத்தில் காதலின் வேகம் அதிகரிக்கும் ஆழமான அன்பை வெளிப்படுத்துவீர்கள். காதல் திருமணம் செய்ய இது நல்ல தருணம். உங்களுக்கு வெற்றிகள் காத்திருக்கிறது.

திபாவளி அன்று சிவபெருமான் கோவிலுக்கு போய் பால் அபிஷேகம் பண்ணுங்க நல்லது நடக்கும்.