ஆழ்துளை கிணற்றில் இருந்து அழுது கொண்டே கைகளை அசைக்கும் குழந்தை சுர்ஜித்! வீடியோ வெளியானது!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாநில பேரிடர் குழுவினர் வந்துள்ள நிலையில் சுர்ஜித் தனது கைகளை அசைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டிப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்து 2 வயது ஆண் குழந்தை சுர்ஜித் அக்கேடாபர் 25ம் திகதி மாலை 5.40 மணிக்கு ஆழதுணை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

கடந்த 17 மணி நேரத்துக்கு மேலாக அவனை மீட்க பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சுர்ஜித்தை மீட்க 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் தற்போது வந்துள்ளனர்.

இவர்கள் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் கமாண்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு வந்தனர். இதையடுத்து சிறுவனை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து கதறி அழுது கொண்டே கைகளை அசைக்கும் வீடியோ வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.