குழந்தை சுஜித்தை நினைத்து விடிய விடிய குமுறிய தாய் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

சென்னை!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் நிலை கண்டு அவர் தாய் கலா மேரி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டி பகுதியில் உள்ள 500 அடி ஆழ கிணற்றில் மேரியின் குழந்தை சுஜித் விழுந்துவிட்டான்.

நேற்று மாலை 5.30 மணிக்கு விழுந்தவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 14 மணி நேரத்தையும் தாண்டி குழந்தையை மீட்க முடியவில்லை.

இரவு நேரம் என்பதால் குழந்தை பயந்துவிடகூடாது என்பதற்காக சுஜித்தின் அம்மா மேரியை குழந்தையுடன் பேச வைத்தனர்.

இந்நிலையில் குழந்தையின் நிலைமையை கண்டு நேற்று முதலே குழுறலோடு அழுது கொண்டிருந்த கலாமேரி தனது மகன் திரும்ப கிடைத்த விடுவான் என நம்பிக்கையோடு திபாவளி நெருங்கும் நிலையில் அவனுக்கு புது துணி தைத்துள்ளார்.

இந்த சூழலில் கலாமேரி திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து, அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.