குழந்தை சுஜித் அழுகை சத்தம் கேட்கவில்லை! நழுவி போன கயிறு.. வெளியான முக்கிய தகவல்!

சுஜித்

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையின் தலைமேல் மண் சரிந்துள்ளதால் ஆக்சிஜன் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 2 வயது குழந்தை சுஜித் நேற்று மாலை 5.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அவனை மீட்க 14 மணி நேரத்துக்கும் மேலாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.

சம்பவ இடத்தில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் உள்ளனர். தற்போது குழந்தை 70 அடி ஆழத்துக்குள் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குழந்தையை மீட்கும் பணி மிகவும் சவாலாக உள்ளது, சுஜித் தலைமேல் மண் சரிந்துள்ளதால், ஆக்சிஜன் செலுத்துவதில் சிரமமாக உள்ளது.

மிகவும் கவனமுடன் கையில் மூன்று முறை கயிறு கட்டப்பட்டது, ஆனால் கயிறு நழுவிவிட்டது, குழந்தையை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது

குழந்தையை காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை உள்ளது, மீட்புப்பணி குறித்து முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

முதலில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது ஆனால் தற்போது, 70 அடிக்கு கீழே சென்றுள்ளதால் குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்க முடியவில்லை என கூறியுள்ளார்.