சிறிய ரோபோ சுர்ஜித்தின் இரு கைகளையும் பற்றியதாக தகவல்!

அண்ணா பல்கலைகழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ, ஆழ்துளை கிணற்றுக்கு சிக்கியுள்ள சுர்ஜித்தின் இரு கைகளையும் பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில், அதிகாரிகள் அயராது உழைத்து வருகின்றனர்.

26 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையில், மூன்றாவது முயற்சியாக அதிநவீன காமிரா, விளக்கு பொருத்தப்பட்ட ரோபோ அனுப்பப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை கழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ, 100 அடிக்கும் கீழே சிக்கிக்கொண்டிருக்கும் சுர்ஜித்தின் இரு கைகளையும் பற்றிக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து இன்னும் சில மணி நேரங்களில் சிறுவனை மீட்கும் பணிகள் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.