அனித்தா ஜெகதீஸ்வரன்

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 45 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றுமுன்தினம் (24) மாலை பதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இந்த நிலையில், போட்டிகளின் முதல் நாளான நேற்று (25) காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அனித்தா ஜெகதீஸ்வரன் முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் வட மாகாணம் பெற்றுக்கொண்ட 2ஆவது தங்கப் பதக்கமும் இதுவாகும்.

வடக்கு மாகாணத்திற்கான வீராங்கனை அனிதா ஜெகதீஸ்வரன் காயமடைந்திருந்த நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்து தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இவர் 3.30 மீற்றர் உயரம் தாண்டி தங்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இதில் வெள்ளிப் பதக்கத்தை மேல் மாகாண வீராங்கனை உதேனி வென்றார். இவர் 3.10 மீற்றர் உயரம் தாண்டினார். வெண்கலப் பதக்கத்தை 3.00 மீற்றர் உயரம் தாண்டிய மேல் மாகாண வீராங்கனை எஸ்.கே.பெரேரா வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவரும் பகிருங்கள்! மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்!
