நவீன கருவி மூலம் மேலே தூக்கப்பட்ட குழந்தை சுர்ஜித்! திடீரென கீழே நழுவியதாக புதிய தகவல்!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் போது நவீன கருவியிலிருந்து நழுவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டி பகுதியில் உள்ள 610 அடியில் உள்ள கிணற்றில் மேரியின் குழந்தை சுஜித் விழுந்துவிட்டான்.

நேற்று மாலை 5.30 மணிக்கு விழுந்தவனை மீட்கும் பணி கடந்த 21 மணி நேரமாக நடந்து வரும் நிலையில் மாநில மற்றும் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அதில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை சுர்ஜித் 70 அடியிலிருந்து 80 அடி ஆழத்துக்கு சென்றுவிட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதோடு குழந்தை சிக்கியிருந்த இடத்தில் மீண்டும் மண் சரிந்து தண்ணீர் ஊற்றெடுப்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையில் குழந்தை சுர்ஜித்தை நவீன கருவியை பயன்படுத்தி தூக்கும்போது அதிலிருந்து குழந்தை கீழே நழுவியதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.