சுயநினைவை இழந்த நிலையில் குழந்தை சுர்ஜித்: மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்!

திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 3-வது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், குழந்தையின் உடல்நலன் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

திருசுச்சியில் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணி 3-வது நாளாக தொடர்கிறது.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தற்போதுவரை இங்கேயே தொடர்ந்து இவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் குழந்தை சுர்ஜித்தின் உடல்நிலை தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், குழந்தை உயிரோடு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தங்களுக்கு தெரிகிறது என்றார். குறிப்பாக அந்த குழந்தையினுடைய உடல் வெப்ப நிலையிலிருந்து குழந்தை உயிரோடு இருக்கிறது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

தற்போது குழந்தை சுயநினைவை இழந்து இருந்தாலும், 75 மணி நேரம் சுய நினைவு இல்லாமல் இருந்தாலும்கூட மீட்டெடுத்துவிட்டால் குழந்தையை காப்பாற்றி விடுவதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கு தயார் நிலையில் உள்ளது என்றார்.

மேலும், ஒரு மருத்துவமனையில் குழந்தையை காப்பாற்றுவதற்கு என்னென்ன வசதிகள் இருக்குமோ அத்தனையும் இங்கே ஐந்து அன்புலன்சில் கொண்டுவரப்பட்டுள்ளது என நம்பிக்கை அளித்துள்ளார்.