சுரங்கம் வழியே குழந்தை சுஜித்தை மீட்க தயார் நிலையில் காத்திருக்கும் வீரர்கள்! வேகமெடுக்கும் மீட்புப் பணி!

திருச்சியைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரர் நகைமுகன், குழிக்குள் இறங்கி தனியாளாக தம்மால் குழந்தையை மீட்க முடியும் என்று நம்பிக்கையுடன் முன்வந்திருக்கிறார்.

சிறுவன் சுஜித்தை மீட்கத் தோண்டப்பட்ட துளை மூலமாக செல்ல ஆயத்தமாகும் மீட்புப் படை வீரர்கள்

குழந்தையை மீட்க குழியில் இறங்க தயாராகும் மூன்று வீரர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளது.

நேற்று முந்தினம் மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டி அருகே உள்ள கிராமத்தில், சுர்ஜித்து என்று இரண்டு வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.

குழந்தையை மீட்டும் பணியில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தேசிய மீட்பு குழுவினர், மற்றும் 6 தனி நபர்கள் முயற்சித்தனர். இந்நிலையில், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது.

இதனை தொடர்ந்து தற்போது தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், ரிங் இயந்திரம் மூலம், பக்கவாட்டில் 110 அடி ஆழத்தில் குழி தோண்ட முடிவு செய்து அதற்கான திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும், அவ்வாறு குழி தோண்டப்படும் பொழுது குழியில் இறங்கி குழந்தையை மீட்கள் மூன்று தீயணப்பு வீரர்கள் தயாராக உள்ளனர். அவர்கள், கண்ணதாசன், தீலீப் குமார், மற்றும் மணிகண்டன் ஆவர்.

சுரங்கம் வழியே குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட 7 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்; தனி ஒருவனாக சென்று மீட்டுவரத் தயார் என வீரர்களில் ஒருவரான நகைமுகன் ஆர்வம்…!

இவர்கள் அனைவருக்கும் தீயணப்பு துறையில் பயிற்சியும், ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வெளிச்சத்திற்கு பேட்டரி, ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் கமெரா ஆகியவை அவர்கள் எடுத்து செல்ல உள்ளனர்.