27 அடியை எட்டிய குழி : இடையில் ஏற்பட்ட இடையூறு : சிறுவனை மீட்பதில் தொடரும் சிக்கல்!!

image_pdfimage_print

27 அடியை எட்டிய குழி

சுர்ஜித்தை மீட்க தோண்டப்படும் குழி சுமார் இரண்டு மணி நேரத்தில் 20 அடியை எட்டியுள்ளது. மணப்பாறை நெடுக்காட்டுப்பட்டியில், சுர்ஜித் என்ற 3வயது குழந்தை ஆழ்துளை கிணற்றி தவறி விழுந்ததை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.

தற்போது 110அடி ஆழத்தில் குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இந்த பணிகள் துவங்கி இரண்டு மணி நேரம் ஆனநிலையில் 20அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது.

ரிங் இயந்திரம் மூலம் தோண்டப்படும் குழி இவ்வளவு தாமதாமாக துழையிட காரணம், 17அடி குழி எட்டியதும் சிறிய பாறைகள் இருந்ததால் அ திர்வுகளை தவிர்க மொதுவாக துளையிட்டு குழி தோண்டப்பட்டுவருகின்றது. குழந்தை கீழே இறங்காமல் இருக்க கையை பிடிக்கும் வகையில் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றரை மணிநேரத்தில் குழி தோண்டிவிடலாம் என்று கூறப்பட்ட நிலையில் இன்று நான்கு மணி நேரம் தோண்டி முடிக்க நேரம் எடுக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.