இன்னமும் உன்னை காப்பாற்ற முடியவில்லையே என்பது வருத்தம் அளிக்கிறது சுர்ஜித்! மனதை பதைபதைக்க வைத்த காணொளி!

சுர்ஜித்

4வது நாளாக சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குழந்தையின் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

சுர்ஜித் மீட்கும் பணி நெடுக்காட்டுப்பட்டியில் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பல பகுதிகளில் இருந்து குழந்தைக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிரத்தேக பிரார்தனைகள் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், பலர் சமூக வலை தளங்களில் #prayforsurjith #savesurjith ஹாஷ்டாக் வைரலாகி வருகின்றது. மேலும், சுர்ஜித் வீடியோ என்று ஒன்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ trend செய்யப்பட்டுள்ளது.

சற்றுமுன் கிடைத்த தகவல்!

முழுமையாக பள்ளம் தோண்ட குறைந்தது 12 மணி நேரமாகும். தொழில்முறையில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ
அதை தான் செய்து வருகிறோம். மேலும் குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் பாதிலேயே கைவிடப்படாது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 65 மணிநேரத்தை கடந்து நடைபெற்று வரும் நிலையில் நடுக்காட்டுப்பட்டியில் தற்போது மழை பெய்து வருகிறது.