உன் பிஞ்சு பாதங்கள் இந்த பூமியில் மீண்டும் தவழ்வதை காண கோடி கண்கள் காத்து கிடக்கின்றன.. மீண்டு வா கண்ணா சுர்ஜித்!… கண்ணீருடன் சுர்ஜித்தின் அம்மா!

image_pdfimage_print

ஆழ்துளை கிணற்றுக்குள்விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

நேரம் செல்ல செல்லமருத்துவர்களும் கலக்கமடைந்துள்ளனர், எனினும் குழந்தையை பத்திரமாக மீட்டுவிடலாம் எனநம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின்அம்மாவை கரூர் எம்.பி ஜோதிமணிநேரில் சந்தித்து பேசினார்.குழந்தையை நினைத்து படுத்தபடுக்கையாய் வீட்டில் மயங்கி கிடந்தவரைஆறுதல் படுத்தினார்.

ஜோதிமணியை பார்த்ததும் கண்ணீர் விட்டழுத சுர்ஜித்தின் அம்மா, என்குழந்தையை எப்படியாவது காப்பாற்றி தந்துவிடுங்கள் என கதறினார்.

அவரை தேற்றிய ஜோதிமணி, கனத்த இதயத்துடன் நின்று கொண்டு இருக்கிறோம்,எப்படியும் குழந்தையை மீட்டு தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடந்து செல்வதால் எந்த தாக்கமும் இல்லாமல் போய்விடுகிறது.

தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக இருந்தாலும், குழந்தையை மீட்க போராடுவது வேதனை அளிக்கிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பிரத்யேக கருவியை வடிவமைக்க மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.

உன் பிஞ்சு பாதங்கள் இந்த பூமியில் மீண்டும் தவழ்வதை காண கோடி கண்கள் காத்து கிடக்கின்றன.. மீண்டு வா கண்ணா சுர்ஜித்… உன் பூமுகம் காண துடித்து கொண்டிருக்கிறோம்