குழந்தை இறந்து 18 மணி நேரமாகியுள்ளது… சம்பவ இடத்திலிருந்து நபர் வெளியிட்ட காணொளி! வீண் போனதா பிரார்த்தனை?

சுர்ஜித்

திருச்சி மணப்பாறைப்பட்டியில் ஆழ்துளை கிணறு ஒன்றில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் கடந்த வெள்ளியன்று மாலை 5.40 மணிக்கு உள்ளே விழுந்துள்ளான்.

தற்போது வரை மீட்புப்பணியில் எந்தவித முன்னேற்றமும் காணவில்லை. சிறுவன் உள்ளே விழுந்து 69 மணி நேரத்திற்கும் மேலாக ஆகியுள்ளது. எந்தவொரு அசைவும் இல்லாமல் இருக்கும் சுர்ஜித் சுயநினைவினை இழந்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றது.

குழந்தை உயிருடன் தான் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் இருந்து வரும் இந்நிலையில் அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் குழந்தை இறந்து 18 மணி நேரத்திற்கு மேலே ஆகிவிட்டது என்றும் குழந்தையை முழுவதும் மண் மூடிவிட்டது, கை மட்டும் தான் தெரிகின்றது என்று கூறியுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் கூறியுள்ளது எந்த அளவிற்கு உண்மை என்பதும், அவர் மீட்பு குழுவில் உண்மையிலேயே வேலை செய்பவரா? அல்லது வேடிக்கை பார்க்க வந்த நபரா? என்பது தெரியாத நிலையில் குறித்த காணொளி தீயாய் பரவி வருகின்றது.