சுஜித் மீது மீட்பு பணிகளின் போது ஏற்பட்ட மிக வேதனையான சம்பவம்! திடீர் பின்னடைவு!

image_pdfimage_print

ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சுஜித் மீது சுமார் 1 அடி அளவிற்கு மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் சுஜித்தை எப்போது மீட்பார்கள் என்று தமிழகமே தற்போது காத்துக் கொண்டு இருக்கிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி, சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.

வெள்ளிக்கிழமை மாலை இவரை மீட்கும் பணிகள் துவங்கியது. 69 மணி நேரமாக மீட்பு பணிகள் நடந்தும், இன்னும் சுஜித் மீட்கப்படவில்லை.

சுஜித் இருக்கும் குழிக்கு அருகில் தற்போது இன்னொரு குழி தோண்டப்பட்டு வருகிறது.

72 மணி நேரம் கடந்தது.. துளையிடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

சுஜித்தை மீட்கும் பணி 72 மணி நேரத்தை கடந்தும் செல்லும் நிலையில், நடுக்காட்டுப்பட்டியில் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரிக் இயந்திரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிக் இயந்திரத்தில் எண்ணெய் கசிவு சரி செய்யப்பட்ட பின் துளையிடும் பணி மீண்டும் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சம்பவ இடத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு தவறி விழுந்தான் 2 வயது குழந்தை சுர்ஜித்தை. குழந்தை விழுந்ததுமே அவனை மீட்கும் பணிகள் ஆரம்பமாகின. ஆனால் பல்வேறு கட்ட மீட்பு நடவடிக்கைகள் அனைத்துமே தோல்வியில் முடிந்தன.

இதையடுத்து, ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் ஆரம்பமாகின. கிணற்றுக்கு பக்கத்திலேயே ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது.

ஆனால் அதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. முதல் ரிக் இயந்திரம் வைத்து 35 அடி மட்டுமே குழி தோண்டப்பட்டது. ஆனால், அந்த இயந்திரம் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனால் 2வது இயந்திரம் கொண்டுவரப்பட்டு, சுஜித் விழுந்த ஆழ்துளை அருகே 3மீ தூரத்தில் 2வது குழி தோண்டப்பட்டு வருகிறது.

விடிகாலை சுமார் 4:30 மணியளவில் இந்த இயந்திரத்திரத்தின் பல் சக்கரத்தில் ரிப்பேர் வந்துவிட்டது. ஆனால், வெல்டிங் மூலம் ரிப்பேர் சரி செய்யப்பட்டு, திரும்பவும் குழி தோண்டும் பணி துவங்கியது. குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் அருகிலேயே தயார் நிலையில் உள்ளனர்.

கடினமான பாறைகள் இருப்பதால் 2-வது ரிக் இயந்திரத்தின் மூலமும் துளை போடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் போர்வெல் மூலம் பாறைகளை உடைக்க திட்டமிடப்பட்டு, அதன்படியே ரிக் இயந்திரத்துக்கு பதிலாக போர்வெல் இயந்திரம் மூலம் உடைத்து துளையிடும் பணி நடைபெற்றது.

இதனிடையே 100 அடிக்கும் கீழே குழந்தை சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவனது கை இறுக பிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை பார்த்துவிட மாட்டோமா என்ற பொதுமக்களின் கவலை அதிகரித்து காணப்படுகிறது. அவன் நல்லபடியாக வந்துவிட வேண்டும் என்று மக்களின் பிரார்த்தனையும் வலுத்து வருகிறது.

இப்போது உடைக்கப்பட்டு வரும் பாறைகள் இளகுவாக இருக்கிறதாம். அதன் நிறமும் மாறி உள்ளதாம். இதைதவிர, கடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற டிரில் பிட் வருகிறது. அதி நவீன டிரில் மெஷின் ஆகாஷ் வந்ததும், டிரில் பணி மேலும் வேகமடையும் என்றும் சொல்லி உள்ளனர்.

நடுக்காட்டுப்பட்டியில் நேற்றிரவு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்துவிட்டு போன நிலையில், இப்போது ஆய்வு மீட்பு பணி நடக்கும் இடத்தை 2-வது முறையாக பார்வையிட்டார்.

அப்போது தோண்டப்பட்ட குழியை ஆய்வு செய்ய குழிக்குள் ஒரு வீரர் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு உள்ளே இறங்கினார்.

பாறையின் தன்மையை அவர் கண்டறிந்ததுடன், குறியீடு செய்யப்பட்டதை அடுத்து மேலே வந்தார். அவர் குறியீடு செய்யப்பட்ட இடத்தில் போர்வெல் மிஷினில் துளை போடப்பட்டது.

இந்த போர்வெல் இயந்திரத்தின் மூலம் பாறையில் துளையிடப்பட்டு, 4 மூலைகளிலும் 6 இன்ச் அளவிற்கு துளைகள் போடப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படியே போர்வெல் மெஷின் மூலம் 6 துளைகள் போடப்பட்டன. இதனிடையே சுஜித் விழுந்துள்ள போர்வெல்லில் மண் விழுந்ததால் பக்கத்தில் குழி தோண்டுவது நிறுத்தப்பட்டுள்ளது.

எனினும் போர்வெல் மூலம் போடப்பட்ட குழியில், ரிக் மிஷின் மூலம் மேலும் அவை அகலப்படுத்தப்பட்டு, மீண்டும் துளையிடும் பணிகள் நடந்தது. குழந்தை மீது விழுந்துள்ள மணலை கருவி மூலம் உறிஞ்சி எடுக்கவும் திட்டமிடப்பட்டது.

ஆனால், ரிக் இயந்திரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரிக் இயந்திரத்தில் எண்ணெய் கசிவு சரி செய்யப்பட்ட பின் துளையிடும் பணி மீண்டும் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, 60 அடிக்கு கீழே மண் உள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரிக் இயந்திரம் மூலம் விரைவில் குழி தோண்டப்படும் என்று நம்பப்படுகிறது.