தற்போது 45அடி- அடிக்கடி பழுதாகும் ரிக் இயந்திரம்…ஏணி மூலம் உள்ளே செல்லும் வீரர்! அடுத்தகட்ட பணி!

சுர்ஜித்தை மீட்கும் பணியில் இயந்திரம் அடிக்கடி பழுதாகி சரி செய்யப்பட்டு வந்த நிலையில், இயந்திரம் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

சுர்ஜித்தை மீட்க இரண்டு ரிக் இயந்திரங்கள் கொண்டுவந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால், இயந்திரம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், அடிக்கடி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பழுது ஏற்பட்டு வருவதாலும், பாறைகள் துழையிட வசதியாகவும் போர்வெல் மூலம் மீண்டும் துளையிடும் பணிகளை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதற்காக ஏணிகள் உள்ளே இறக்கி அதன் மூலம் ஒருவர் உள்ளே சென்று பார்க்க உள்ளே செல்ல உள்ளார்.

குறிப்பாக, 45அடிகள் மட்டுமே தற்போது வரை துளையிடப்பட்டுள்ளது. 66 மணி நேரம் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், அப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் வந்து கூடி நின்று புகைப்படம் எடுப்பது அருகில் செல்ல முற்படுவது போன்ற, இடையூர் ஏற்படுத்துவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.