திருச்சி மாவட்டத்தில் ஆள்துளை கிணற்றில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை குறித்து பொய்யான வாக்குறுதி தர விரும்பவில்லை என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆள்துளை கிணற்றில் சிக்கிய 70 மணி நேரத்தில் மீட்டெடுத்தால் சிறுவனை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தரப்பு ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில்,

தற்போது பல தடங்கல்களை கடந்து மீட்கும் பணி 4-வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில் சிறுவன் சுஜித்தின் தற்போதைய நிலை குறித்து களத்தில் இருக்கும் நிபுணர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தங்களால் பொய்யான வாக்குறுதிகளை தர விரும்பவில்லை என கூறும் நிபுணர்கள் தரப்பு, இருப்பினும் நம்பிக்கை கைவிடவில்லை எனவும் கண்டிப்பாக மீட்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த அந்த நாள் காலை, சிறுவன் சுர்ஜித் வெறும் இரண்டு இட்லி மட்டுமே சாப்பிட்டதாகவும், மதியம் உணவருந்தாமல் விளையாட்டில் நேரத்தை செலவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில்,

குழியில் சிக்கி நான்கு நாட்களாக 2 வயது சிறுவனால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மட்டுமின்றி, அதுபோன்ற ஆழ்துளை கிணற்றுக்குள் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் எனவும், வெறும் நாலரை அங்குலம் கொண்ட இந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் சிறுவனின் நிலை உண்மையில் கவலை தரும் வகையிலேயே இருக்கும் எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
