திருச்சியில் சிறுவன் சுர்ஜித்தை காவுகொண்ட ஆழ்துளை கிணறை, அவரது பெற்றோரே விவசாயத்திற்காக தோண்டினார்கள் என்ற தகவல் உண்மையில்லை என சுர்ஜித்தின் தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து, 5 நாட்களுக்கு பின்னர் சடலமாக உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில், சிறுவன் மரணத்திற்கு காரணம் அவரது பெற்றோரே எனவும், அவர்களே ஆழ்துளை கிணற்றை பயன்படுத்திவிட்டு மூடாமல் விட்டுவிட்டனர் என குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த சிறுவன் சுர்ஜித்தின் தாயார் கலா மேரி, குறித்த ஆழ்துளை கிணறானது, சுர்ஜித்தின் தாத்தா காலத்தில் தோண்டப்பட்டது எனவும்,

இதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, அந்த ஆழ்துளை கிணறு தோண்டும்போது சுர்ஜித்தின் தந்தை பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

மீட்புப் பணிகள் குறித்து ஊர் மக்களில் சிலர் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். ஆனால் சுஜித்தின் தந்தை, அரசாங்கம் நல்ல முயற்சி எடுத்தது, அனைவரும் துரிதமாக செயல்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி இம்மாதிரியான சம்பவம் முதலும் கடைசியானதாக இருக்க வேண்டும். இம்மாதிரியான ஆழ்துளை கிணற்றில் விழுந்த கடைசி குழந்தை என்னுடையதாகவே இருக்கட்டும் என்றும் அவர் கண்கலங்க தெரிவித்துள்ளார்.
