சுர்ஜித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இலங்கையில் பெரும்பான்மை சமூகம் அஞ்சலி! எந்தப் பிரார்த்தனையும் பலிக்காமல் வீண் போனதே! போய் வா மகனே!

சுர்ஜித்

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் இறப்பு இந்தியா இலங்கை உட்பட அனைத்து மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தை சுர்ஜித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இலங்கையில் சிங்கள குடும்பம் ஒன்று வீட்டில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளது.

ஏற்கனவே சுர்ஜித் மீண்டும் வர வேண்டும் என தெரிவித்து முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என பல பகுதிகளில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.