சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு குறித்து தாய் தெரிவித்த பகீர் தகவல்!

கடந்த 4 நாட்களாக தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கி கொண்ட சம்பவம்.

அரசாங்கம் எவ்வளவோ முயன்றும், 80 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுர்ஜித் உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

இந்நிலையில் சமூக ஊடகங்கள் சில சுர்ஜித் இறந்ததற்கு, அவனுடைய பெற்றோரும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தன. இந்நிலையில் அவனுடைய தாயார் கலா மேரி கூறியதாவது, “அந்த ஆழ்துளைக்கிணறை விவசாயத்திற்காக நாங்க கட்டவில்லை.

அது சுர்ஜித்தின் தாத்தா காலத்தில் கட்டப்பட்டது. அப்போது என் கணவர் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். நாங்கள் இந்த பகுதியில் 10 வருடங்களாக வசித்து வருகிறோம்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

சுர்ஜித்தின் தந்தை கூறுகையில், “ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறப்பது கடைசியாக என்னுடைய குழந்தையாக தான் இருக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நிகழாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ளவேண்டும். அரசாங்கத்தினர் அனைவரும் மிகவும் துரிதமாக செயல்பட்டனர்” என்று கூறினார்.

இருப்பினும் அரசாங்கத்தினர் மேற்கொண்ட மீட்புப்பணி குறித்து அப்பகுதி மக்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நம்மால் மறுக்க இயலாது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.