பிரசவத்திற்கு பின்னர் கடந்த காலம் அத்தனையும் மறந்த இளம் தாயார்: கணவர் செய்த உருக வைக்கும் செயல்!

image_pdfimage_print

அமெரிக்காவில் பிரசவத்தின் போது ஏற்பட்ட வலிப்பு நோயால் கடந்த காலம் அத்தனையும் மறந்த இளம் தாயாருக்கு அவரது கணவர் செய்த செயல் திரைப்படத்தை விஞ்சியதாக அமைந்துள்ளது.

அமெரிக்கரான 38 வயது Steve Curto தமது நான்காவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் வகையில் மனைவிக்கு பரிசளித்த புத்தகமே சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.

முதல் முறை தாயாராகும் Camre-கு பிரசவத்தின் போது எதிர்பாராதவிதமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.

இது அவரை மருத்துவ ரீதியான கோமாவுக்கு இட்டுச் சென்றது. அதில் இருந்து கண் விழித்த அவருக்கு அதன் பின்னர் எதுவும் நினைவில் இல்லை.

தமது கணவர் ஸ்டீவ் அல்லது புதிதாக பிறந்த காவின் என யாரையும் Camre-கு நினைவில் இல்லை.

இதனைத் தொடர்ந்து பெற்றோரின் ஆலோசனைப்படி Camre அவர்களுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் மீண்டும் தமது கணவருடன் இணைந்து வாழ்ந்து வரும் Camre கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்தவற்றை தமது கணவர் தொகுத்துள்ள புத்தகத்தை வாசித்து வருகிறார்.