இலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரின் மோசமான செயற்பாடு!

மோ சமான செயற்பாடு

பாடசாலை மாணவி ஒருவர் ஹெ ரோயின் போ தைப்பொருள் பக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை, கந்தர பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் செயற்பாடு தொடர்பில் சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர் அவரை தனியான இடத்திற்கு அழைத்து சென்று சோ தனையிட்டுள்ளார். அவர் தனது வாய்க்குள் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைப்பதற்கு முயற்சித்துள்ளார்.

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் போ தைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரான மாணவி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.