2019 நவம்பர் மாத ராசிப்பலன் : எந்த ராசிக்கு திடீர் யோகம் அடிக்க போகுது? உங்க ராசிக்கு எப்படி?

2019 ஆ‌ம் ஆ‌ண்டு நவம்பர் மாத‌த்‌தி‌ற்கான ஜோ‌திட‌ப் பல‌ன்களில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகுது என்று பார்ப்போம்.

மேஷம்
நவம்பர் மாதம் உங்களுக்கு அற்புதமான மாதம். பண விசயங்களில் நீங்கள் பதற்றமடையலாம் ஆனாலும் குருவினால் உங்களுக்கு நல்லது நடக்கும். சில நாட்களில் நிதி நிலமை சீரடையும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பிசினஸ் விசயங்களில் அதிக முதலீடுகளை தவிர்க்கவும். இல்லாவிட்டால் இழப்புகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

இந்த மாதத்தில் குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். உங்கள் அன்பானவர்கள் கோபமாக இருந்தாலும் அதை சமாளிப்பீர்கள்.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மழை காலம் என்பதால் சளி தொந்தரவுகள் ஏற்படும் தொற்றுநோய் தாக்கும் முன்பு உங்க உடம்பை நீங்க கவனித்துக்கொள்ளுங்கள்.

இந்த மாதம் நெருப்பு உங்களுக்கு நன்மை செய்யும். நன்மை செய்யும் கிரகம் உங்க ராசிநாதன் செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 11, 24,38, 42, 56

அதிர்ஷ்ட நாட்கள்: புதன், வியாழன், ஞாயிறு, செவ்வாய்

அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள், வெள்ளை, பச்சை

ரிஷபம்
இந்த மாதம் உங்களுக்கு மிகவும் பயனுள்ள மாதம். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்கு இந்த மாதம் நல்ல வேலை கிடைக்கும். அவை உங்க வாழ்க்கையை மாற்றும்.

பிசினஸ்ல உங்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு புது வேலை கிடைக்கும். சிறு பயணங்கள் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

இந்த மாதம் நீங்க நிம்மதியாக இருப்பீர்கள். குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதை கழிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

ஆனால் அதற்கான நேரம் கிடைக்காமல் போகும் வேலை பிசியில் இருப்பதால் உங்களுக்கு குடும்பத்தினருடன் செலவழிக்க நேரம் கிடைக்காது.

மாதத்தின் பிற்பகுதியில் கிரகங்களின் இடமாற்றத்தினால் உங்களுக்கு சில தொந்தரவுகள் ஏற்படும். பணம் அதிகமாக கிடைக்கும். அதிர்ஷ்டகரமான மாதம். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

பஞ்சபூதங்களில் பூமி நன்மை செய்யும். நன்மை செய்யும் கிரகம் உங்க ராசிநாதன் சுக்கிரன்.

அதிர்ஷ்ட எண்: 12, 27, 33, 49, 51, 66

அதிர்ஷ்ட நாட்கள்: புதன், ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

அதிர்ஷ்ட நிறங்கள்: பழுப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை, நீலம்

மிதுனம்
குடும்ப விசயத்தில் இன்று மூன்றாவது நபர் தலையிடலாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினை மன அழுத்தத்தை தரலாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.

அப்புறம் பாதிப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு பிசினசில் வெற்றியை எதிர்பார்க்க முடியாது. சட்ட சிக்கல்களில் வெற்றி பெற முடியாமல் போகலாம். மாத இறுதியில் கிரகங்களின் இட மாற்றத்தினால் நீங்க செய்யும் முதலீடு லாபத்தை கொடுக்கும்.

பண வருமானத்தில் லாபம் நஷ்டம் என இரண்டும் இருக்கும் கவலை வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமைக்கு மதிப்பு கூடும்.

புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்கவும். உடல் நலம் இந்த மாதம் அற்புதமாக இருக்கும்.

பஞ்சபூதங்களில் காற்று நன்மை செய்யும். உங்க ராசிநாதன் புதன் சாதகமாக கிரகம்.

அதிர்ஷ்ட எண்: 4, 16, 23, 35, 43, 50

அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், வெள்ளி, செவ்வாய், வியாழன்

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம், பச்சை

கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏமாற்றத்தை கொடுக்கும். மற்றவர்களை நீங்கள் அதிகம் நம்பவேண்டாம் அது சிக்கலை ஏற்படுத்தி விடும். அலுவலகத்தில் உங்களுக்கு கொடுத்த பொறுப்பை நீங்களே கவனிங்க.

இல்லாவிட்டால் அது பாதிப்பை ஏற்படுத்தி விடும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் வேலைத்திறனை பார்க்கும் உயரதிகாரிகள் உங்களுக்கு பதவி உயர்வை தருவார்கள். சொந்த வாழ்க்கையில் சில சோகங்கள் ஏற்படலாம். இதனால் மன அழுத்தம் ஏற்படலாம்.

திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். தம்பதியர் இடையே சிக்கல்கள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து போங்க.

உங்கள் முயற்சிகள் தோல்வியடையக்கூடும். உங்கள் நிதி முடிவுகளை நீங்கள் சரியாக எடுங்கள் பதற்றம் அதிகரிக்கலாம். மன உளைச்சல் ஏற்படலாம் கவனம்.

பஞ்சபூதங்களில் நன்மை தரக்கூடியது நீர். நன்மை தரும் கிரகம் உங்க ராசிநாதன் சந்திரன்

அதிர்ஷ்ட எண்: 9, 13, 20, 38, 45, 58, 63

அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், திங்கள், சனி, புதன்

அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் பச்சை, வானம், கிரீம், வெள்ளை

சிம்மம்
சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே. இந்த மாதம் காதல் விஷயங்களில் நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள்.

உங்கள் வாழ்க்கைத் துணைவர் உங்களுக்காக எவ்வளவு சரியானவர் என்பதை நீங்கள் உணர்ந்து, சந்தோஷமாக அனுபவிப்பீர்கள்.

திருமணமான தம்பதியினருக்கும் இந்த மாதம் நன்றாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் உங்கள் மனைவியுடன் சேர்ந்து எடுப்பீர்கள். நீங்கள் நம்பிக்கையை வைத்திருங்கள் உங்களின் மன அழுத்தம் போகும்.

உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பாடுகள் ஏற்படும். உங்களுக்கு ஏற்படும் கோபம் மன அழுத்ததை ஏற்படுத்தலாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். மாத பிற்பகுதியில் நீங்க புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.

பண விசயங்கள் உங்களுக்கு உற்சாகத்தை தரலாம். உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். உடம்பில் மறைந்திருந்த நோய் வெளிப்படலாம் மருத்துவமனைக்கு செல்லவும்.

பஞ்சபூதங்களில் நெருப்பு நன்மை செய்யும். உங்க ராசிநாதன் சூரியன் நன்மை செய்யும்

அதிர்ஷ்ட எண்: 5, 21, 30, 44, 59, 64

அதிர்ஷ்ட நாட்கள்: செவ்வாய், வெள்ளி, சனி, திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: பழுப்பு, மஞ்சள், அடர் சிவப்பு, நீலம்

கன்னி
இந்த மாதம், நீங்கள் வேலை செய்யும் இடத்தில் மிகவும் கடினமாக உழைப்பீர்கள். பிசினஸ் விசயமாக சிறிய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இது உங்களை சோர்வடையச் செய்யும், ஆனால், எந்தவொரு விசயத்தில் இருந்தும் நீங்கள் பின்வாங்க மாட்டீர்கள். உங்கள் பிடிவாதம் விரைவில் உங்களுக்கு சில பெரிய வெற்றிகளைக் கொடுக்கும்.

பிசினஸ் செய்பவர்களுக்கு இந்த மாதத்தில் சிறிய சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு அவசர முடிவையும் தவிர்க்கவும், குறிப்பாக நீங்கள் ஒரு புதிய வேலையில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால். யோசித்து முடிவு செய்யுங்கள்.

உங்க குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தரும் செய்திகள் வந்து சேரும். திருமணம் போன்ற நல்ல காரியங்கள் ஏற்படும். உங்க வாழ்க்கை துணைவரின் அன்பில் கரைந்து போவீர்கள். மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.

மாத இறுதியில் பண விசயம் உங்களை மன அழுத்திற்கு உள்ளாக்கும். வேலைகளில் பிசினஸ் விசயங்களில் நஷ்டம் ஏற்படலாம். உங்க ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

நன்மை செய்யும் பஞ்சபூதம் பூமி. உங்களுக்கு உங்க ராசிநாதன் புதன் நன்மை செய்யும்.

அதிர்ஷ்ட எண்: 4, 9, 18, 25

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, வியாழன், புதன்

அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், கிரீம், வானம், பச்சை, மெரூன்

துலாம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். கவனமாகவும் பொறுமையாகவும் எதையும் கையாளாவிட்டால் அதிக இழப்பை சந்திக்க நேரிடும்.

திடீரென்று, சில நல்ல வாய்ப்புகள் உங்கள் கதவைத் தட்டக்கூடும். இந்த மாதத்தில் நீங்க வெளிநாட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இது உங்களுக்கு வெற்றியின் கதவைத் திறக்கும். மாதத்தின் ஆரம்பம் ஊழியர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்காது, என்றாலும் படிப்படியாக சில விஷயங்கள் உங்களுக்கு ஆதரவாக தோன்றும். அந்த வாய்ப்பு சிறியதாக இருந்தாலும் நிச்சயமாக உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும்.

வியாபாரத்தில் பெரிய முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். உங்களின் நிதி நிலைமையை வலுப்படுத்த நீங்க கவனமாக மெதுவாக அடிஎடுத்து வைக்கவும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். கணவன் மனைவி உறவு இணக்கமானதாக இருக்கும் காதலர்களுக்கு இடையே சின்னச் சின்ன சண்டை ஏற்படலாம். ஊடல்களை கூடல்களாக மாற்றுங்கள் நல்லது நடக்கும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

பஞ்ச பூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும். சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 6, 14, 25, 39, 47, 56, 61

அதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, புதன், திங்கள், ஞாயிறு

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு, நீலம், வெள்ளை

விருச்சிகம்
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்திருக்கும். பிசினஸ், குடும்ப வாழ்க்கை இரண்டுமே அற்புதமாக இருக்கும். தொடர் தோல்விகள் மனதில் சோர்வை ஏற்படுத்தும். பணம் முதலீடு செய்யும் முன்பு கவனமாக இருக்கவும்.

குருவின் சஞ்சாரம் தோல்வியை வெற்றிகரமாக மாற்றும். பிசினஸ் விசயங்களில் சில மோதல் ஏற்படும். அவசர முடிவுகளை தவிருங்கள்.

குடும்ப உறவுகளிடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். சோகத்திலும் நெருக்கடியிலும் அவர் உங்களுக்கு துணை நிற்பார்.

பண விசயத்தில் யாரை நம்பி கொடுக்க வேண்டாம். உங்க உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் நலம் தொடர்பான அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம். அது உங்களை மேலும் கஷ்டப்படுத்தும்.

தண்ணீர் உங்களுக்கு நன்மை செய்யும். நன்மை தரும் கிரகம் செவ்வாய் மற்றும் புளூட்டோ.

அதிர்ஷ்ட எண்: 2, 15, 26, 37, 49, 56

அதிர்ஷ்ட நாட்கள்: திங்கள், புதன், செவ்வாய், ஞாயிறு

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா, பழுப்பு, அடர் சிவப்பு

தனுசு
இந்த மாதம் உங்களுக்கு அதி அற்புதமான மாதம். ஆறுதலான விசயங்கள் நடைபெறும். நீங்க விரும்பியது நடக்கும்.

மனம் அமைதியாகவும் திருப்தியாகவும் இருக்கும். இதுபோன்ற அமைதியான தன்மையைப் பேணுவதற்கு நீங்கள் எந்தவிதமான விவாதங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும், தேவையற்ற மன அழுத்தம் காரணமாக முக்கியமான பணிகளில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பக்கூடும்.

இந்த மாதம் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடும், அரசாங்க வேலைக்கு ஆசைப்படுபவர்களுக்கு வெற்றிகரமாக கிடைக்கும். பிசினஸ்ல நல்ல முடிவுகள் கிடைக்கும். லாபம் ஏற்படும்.

புதிதாக வங்கியில் கடன் பெற முயற்சி செய்வீர்கள். கடன் கிடைக்கும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும்.

செலவுகளை சிக்கனமாக செலவு செய்யுங்கள். பெற்றோர்கள் வீட்டில் மூத்தவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். எதிரிகள் தொல்லை நீங்கும். கவனக்குறைவாக இருக்காதீர்கள் உங்க ஆரோக்கியம் இன்றைக்கு அற்புதமாக இருக்கும்.

பஞ்சபூதத்தில் நெருப்பு உங்களுக்கு சாதகமானது. குருபகவான் உங்களுக்கு சாதகமான கிரகம்.

அதிர்ஷ்ட எண்: 1, 7, 15, 23, 34, 45, 54

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, சனி, வியாழன், செவ்வாய்

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், மெரூன், அடர் பச்சை, நீலம்

மகரம்
இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான மாதம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடின உழைப்பும் குருவின் ஆசியும் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

உங்க வாழ்க்கை துணையோடு சேர்ந்து நீங்க நேரத்தை செலவிடுவீர்கள். இது உங்களின் உறவை வலிமையாக்கும்.

அன்பை ஆழப்படுத்தும் ஒருவருக்கொருவர் மனதை விட்டு பேசுங்கள் நல்லது நடக்கும். திருமண உறவில் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போவதால் மன அழுத்தம் நீங்கும்.

பிரச்சினைகளை கண்டுபிடித்து அடி ஆழத்தில் இருந்து தீர்க்க முடிவு செய்யுங்கள். பண விசயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மாத இறுதியில் சில பிரச்சினைகள் வரலாம். கவனமாக கையாளுங்கள். உங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுங்கள். பண விசயங்கள் அற்புதமாக இருக்கும்.

மாத இறுதியில் உடல் நல பிரச்சினைகளை கவனிங்க செலவுகளை சிக்கனமாக கையாளுங்கள்.

பஞ்சபூதங்களில் பூமி சாதகமானது. சாதகமான கிரகம் உங்க ராசிநாதன் சனி.

அதிர்ஷ்ட எண்: 8, 16, 24, 38, 45, 50, 66

அதிர்ஷ்ட நாட்கள்: புதன், திங்கள், சனி, ஞாயிறு

அதிர்ஷ்டநிறங்கள்: வெள்ளை, இளஞ்சிவப்பு, வானம், பழுப்பு

கும்பம்
சனியை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே. இந்த மாதம் உங்களக்கு நல்ல செய்திகளை தேடி வரம். உயர்பதவியும் சம்பள உயர்வும் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு சாதகமான மாதம். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். பண விசயத்தில் நீங்க சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.

வியாபாரத்தில் அதிர்ஷ்டமும் லாபமும் அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் நீங்க சில சட்ட சிக்கல்களை சந்திப்பீர்கள்.

அதிக செலவுகளை சந்திப்பீர்கள். சமாளியுங்கள். முக்கியமான வேலைகளை கவனிங்க. குடும்ப உறுப்பினர்களுடன் சில சந்தோஷ தருணங்களை அனுபவிப்பீர்கள். திருமண வாழ்க்கை சந்தோஷமாகவும் மன மகிழ்ச்சியுடனும் இருக்கும்.

பேச்சில் நகைச்சுவை இழையோடும். தம்பதி சமோதராக அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவீர்கள்.

பஞ்சபூதங்களில் காற்று உங்களுக்கு நன்மை செய்யும். சாதகமான கிரகம் சனி. உங்க ராசிநாதன் சனி நன்மை செய்யும். யுரேனஸ் ஒத்துழைப்பு கொடுக்கும்.

அதிர்ஷ்ட எண்: 9, 13, 23, 36, 48, 59, 62

அதிர்ஷ்ட நாட்கள்: வெள்ளி, புதன், சனி, திங்கள்

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், மெரூன், கிரீம், ஊதா, ஆரஞ்சு

மீனம்
நீங்க பண பரிவர்த்தனைகளை சந்தோஷமாக மேற்கொள்வீர்கள். சட்டச் சிக்கல்களை தைரியமாக எதிர்கொள்வீர்கள்.

இது உங்களின் பணியை கெடுக்கும். நீதிமன்றத்தில் வாய்தா வாங்கியே ஓய்ந்து போவீர்கள்.

சொத்து ஆவணங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்க. எந்த அளவிற்கு பண வருமானம் வருகிறதோ அந்த அளவிற்கு செலவும் கூடும். வேலை செய்யும் இடத்தில் சில சவால்களை சந்திப்பீர்கள் என்றாலும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் தடைகளை தாண்டி சமாளிப்பீர்கள்.

கணவன் மனைவி கசப்புகளை தவிர்த்து சந்தோஷமாக நேரத்தை செலவு செய்யுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். எதையும் மென்மையாக கையாளுங்கள் நல்லதே நடக்கும்.

பஞ்சபூதங்களில் நீர் நன்மை செய்யும். நன்மை செய்யும் கிரகம் குரு , நெப்டியூன்.

அதிர்ஷ்ட எண்: 4, 12, 20, 31, 44, 58, 60

அதிர்ஷ்ட நாட்கள்: ஞாயிறு, வெள்ளி, புதன், சனி

அதிர்ஷ்ட நிறங்கள்: வானம், இளஞ்சிவப்பு, நீலம், மஞ்சள், அடர் சிவப்பு