மராட்டிய மாநிலம் மும்பை நகரில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்த தமது காதல் கணவனின் நினைவாக இளம்விதவை ஒருவர் எடுத்த முடிவு பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
மும்மை நகரில் குடியிருந்து வருபவர் ஷீதல். கல்லூரிகளுக்கு இடையேயான மாநாடு ஒன்றில் முதன் முறையாக அவனை சந்தித்துள்ளார் ஷீதல்.
அறிமுகமான பின்னரே தெரிய வந்தது இருவரும் ஒரே கல்லூரி என்பது. தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். அவன் தொடர்பான அனைத்தையும் அவளிடம் அவன் பகிர்ந்து கொண்டுள்ளான்.
அவளிடம் மட்டுமே அவன் அதிகம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். இந்த காலகட்டத்தில் அவன் மிகவும் சோர்வாக காணப்பட்டான்.
நாளுக்கு நாள் நிலை மோசமடையவே இறுதியில் மருத்துவரை சந்தித்துள்ளான் அவன். தொடர்ந்து ஷீதலிடம் ஏதும் தெரிவிக்காமல் தனது சொந்த கிராமத்திற்கு கிளம்பி சென்றுள்ளான்.
அன்றைய நாள் மாலை, ஷீதலை தொலைபேசியில் அழைத்த அவன், தனது நிலை குறித்து பேசியுள்ளான். தமக்கு புற்றுநோய் இருப்பதாகவும், இது மூன்றாவது கட்டம் எனவும் அவளிடம் கூறியுள்ளான்.
இதைக் கேட்ட ஷீதல் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். ஆனால் அதன் பின்னரே அவனை தாம் இதுநாள் வரை காதலித்து வந்தது ஷீதலுக்கு புரிந்தது.
புற்றுநோயின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சாதாரண வாழ்க்கையை முன்னெடுக்கலாம் என மருத்துவர்கள் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் கீமோ சிகிச்சையை அவன் தொடர்ந்துள்ளான்.

மட்டுமின்றி கல்லூரிக்கும் அவன் திரும்பியுள்ளான். அதன் பின்னர் நாளுக்கு 24 மணி நேரமும் ஷீதல் அவனை அக்கறையுடன் கவனிக்க துடங்கினாள்.
அவனது அனைத்து தேவைகளையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் ஷீதல். கல்லூரி முடித்து வெளியேறிய பின்னர் ஒருநாள்,
தாம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விருப்பமா எனவும் அவன் ஷீதலிடம் கேட்டுள்ளான்.
பிரியவே முடியாத நிலையில் இருந்த ஷீதல், அவனது காதலுக்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு நாளில், மருத்துவரை சந்தித்துள்ளனர்.
அவர் மேற்கொண்ட சோதனையில், உடம்பின் முழு பகுதியிலும் புற்றுநோய் வியாபித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆறு மாதம் மட்டுமே இனி உயிருடன் இருக்க முடியும் எனவும் மருத்துவர் அவனுக்கு தெரிவித்துள்ளார்.
அந்த தகவல் தமக்கு பேரிடியாக அமைந்தது என கூறும் ஷீதல், தமது வாழ்க்கையை அவனுக்காக மாற்றியதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். அவனுடன் பல மருத்துவர்களை சென்று சந்தித்ததாக கூறும் ஷீதல்,
கடைசி கட்டத்தில் அவன் உருக்குலைந்து படுக்கையில் இருந்து எழ முடியாத நிலையில் மரணமடைந்ததாக ஷீத.ல் பதிவு செய்துள்ளார்.
ஆனால் அந்த தாக்கத்தில் இருந்து தம்மால் மீள முடியாமல் தவித்ததாக கூறும் அவர், சுமார் ஒரு மாத காலம் ஆசிரமம் ஒன்றில் தங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த ஆசிரமத்தில் வைத்தே உதவும் மனப்பான்மையை தாம் வளர்த்துக் கொண்டதாகவும்,
அதன் பின்னர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக பதிவு செய்துள்ளார் ஷீதல்.
அவன் மர ணம் நேரிடையாக பார்த்திருக்க கூடாது என தாம் இப்போதும் கருதுவதுண்டு எனவும், இன்னொரு பிறவியில் இருவரும் ஒன்றாக வாழ வழி செய்ய கடவுளிடம் வேண்டுவதாகவும் ஷீதல் தெரிவித்துள்ளார்.
