சூரசம்ஹார நிகழ்வு!

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும். இந்த விரதம் கடந்த 28ம் திகதி ஆரம்பமாகியது.

சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (2) முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வேலவர் கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்ஹாரம் இன்று ஆலயத்தில் நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு விசேட அபிடேங்கள் இடம் பெற்று மங்கள வாத்தியம் முழங்க உள்வீதி வலம் வந்து பக்தர்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் மயில் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த முருகப்பெருமான் சூரனை வ தம் செய்து பக்தர்களுக்கு அருள் பா லித்து காட்சி கொடுத்தார்.

இந்த வகையில் இவ்வாலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய விரதத்தினை நிறைவேற்றிக் கொண்டனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை ஸ்ரீ கல்யாணவேலவர் ஆலயத்தில் வருடம் தோறும் இளைஞர்களால் மிக சிறப்பாக சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகின்றமை குறிப்பிடதக்கது.

படங்கள் – Theivendran Thiruneepan
















