சுஜித் ப லியை தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 5வயது சிறுமி…. மீட்பு பணிகள் துரிதம்

ஹரியானா மாநில ஹர்சிங்புரா கிராமத்தில் 50அடி ஆழ்துளை கிணற்றி 5வயது சிறுமி விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 25ஆம் திகதி மாலைவேளையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2வயது குழந்தை சுஜித் 29ஆம் திகதி அதிகாலையில் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவத்தில், உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசுவோர் பலரது பிரார்த்தனைகளும் முன் வைத்தனர்.

இதனை தொடர்ந்து ஆழ்துளை கிணறுகள் இனி மூடாமல் இருக்க கூடாதென்ற முடிவில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால், தற்போது ஹரியான மாநிலத்தில் ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் 50அடி ஆழ்துளை கிணற்றில் 5வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

அவரை மாற்று வழிகள் கொண்டு மீட்க முற்படாமல், முதலில் பொக்லைன் இயந்திரம் கொண்டு குழி தோண்டி மீட்கும் பணிகள் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.