18 மாதங்களில் இரண்டு முறை அடித்த லொட்டரி… பணமழையில் நனைந்த அதிர்ஷ்டகாரன்!

லொட்டரி

அமெரிக்காவைச் சேர்ந்த நபருக்கு 18 மாதங்களில் இரண்டு முறை 1 மில்லயன் டொலர் லொட்டரியில் அடித்துள்ளதால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

வாழக்கையில் ஒரு முறையாவது லொட்டரி அடிக்கும் அதிர்ஷ்டம் தங்களுக்கு இருக்க வேண்டும் என பலர் வேண்டுகொள்வார்கள். ஆனால், Massachusetts மாகாணத்தைச் சேர்ந்த நபருக்கு 18 மாதங்களில் இரண்டாவது முறையாக 1 மில்லியன் டொலர் லொட்டரியில் அடித்துள்ளது.

Mendon நகரத்தைச் சேர்ந்த Rolf Rhodes என்ற நபரே அந்த பேரதிர்ஷ்டகாரன். Massachusetts மாநில லொட்டரி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, Rolf Rhodes வாங்கிய 10 டொலர் மதிப்புள்ள லொட்டரி டிக்கெட்டிற்கு கடந்த அக்டோபர் 30ம் திகதி 1 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது.

Rhodes தனக்கு 18 மாதங்களுக்கு முன் அடித்த பரிசை 650,000 அமெரிக்க டொலராக பெற தெரிவு செய்திருந்தார். தற்போது அடித்துள்ள இரண்டாவது பரிசை 20 வருடாந்திர தவணைகளில் 50,000 அமெரிக்க டொலர்களாக பெற முடிவு செய்துள்ளார்.