இந்த வார ராசிப்பலன்கள்! எதிர்பாராத அதிர்ஷ்டம் யாருக்கு?

03-11-2019 முதல் 09-11-2019 வரை இந்த வார ராசிப்பலனில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி என்பதை பார்ப்போம்.

மேஷம்: ராகு, குரு, சுக்கிரன், செவ்வாய் அனுகூல பலன் தருவர். தம்பி, தங்கையினால் உதவி உண்டு. பண வரவு அதிகம் பெற அதிகம் பணி புரிவீர்கள்.

வீடு, வாகன வகையில் அனுகூலம் உண்டு. புத்திரர்கள் படிப்பு, வேலையில் தாமதம் ஏற்படலாம். எதிர்ப்பாளரால் இருந்த தொந்தரவு பெருமளவில் குறையும். அனுபவங்களை வாழ்வின் பாடமாக கருதுவீர்கள். மனைவி ஒற்றுமை குணம் பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி புரிவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் தாராள பண வசதி கிடைத்து புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பு, விளையாட்டில் சாதனை புரிவர்.
பரிகாரம் : குரு வழிபாடு மனதில் ஞானம் தரும்.

ரிஷபம்: சூரியன், புதன், சந்திரன் தாராள நற்பலன் தருவர். சிறு பணியிலும் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள். நன்மையும், புகழும் வந்து சேரும்.

தம்பி, தங்கையின் விருப்பத்திற்கு மாறாக பேச வேண்டாம். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரரின் அறிவு திறன் மேம்பட ஆலோசனை சொல்வீர்கள். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். பகைவரால் உருவான செயல் பலமிழக்கும். மனைவிக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற மாற்று உபாயம் தேடுவீர்கள். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் பிறருக்காக பண பொறுப்பு ஏற்க கூடாது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.
பரிகாரம் : துர்கை வழிபாடு துன்பம் போக்கும்.

மிதுனம்: குரு, சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் வழங்குவர். தாமதமான செயல்களில் புதிய யுக்தியால் முன்னேற்றம் ஏற்படும்.

சுய கவுரவம் பாதுகாத்திடுவீர்கள். நற்குணமுள்ளவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர்களின் நற்செயல்கள் பெற்றோருக்கு பெருமையை தேடி தரும். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணம் சேமிப்பாகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.
சந்திராஷ்டமம் : 3.11.19 காலை 9:42 மணி – 5.11.19 இரவு 7:49 மணி
பரிகாரம் : மீனாட்சி வழிபாடு செல்வ வளம் தரும்.

கடகம்: பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். குடும்பத்தின் நலன்களை அக்கறையுடன் பாதுகாப்பீர்கள்.
புத்திரர் உங்கள் வழி காட்டுதலை பின்பற்றி முன்னேறுவர். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். முக்கிய செயல்கள் நிறைவேற இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். சமரச பேச்சுகளில் தீர்வு கிடைக்கும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். வெளியூர் பயணம் அதிகரிக்கும். மனைவியின் சொல்லும், செயலும் சிறப்பாக அமைந்திடும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். பணியாளர்கள் கடமையுணர்வுடன் பணிபுரிவர். பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
சந்திராஷ்டமம் : 5.11.19 இரவு 7:50 மணி – 8.11.19 காலை 7:23 மணி
பரிகாரம் : சிவன் வழிபாடு வெற்றியளிக்கும்.

சிம்மம்: குரு, சுக்கிரன், சூரியன், ராகு ராஜயோக பலன் தருவர். செயல்களில் எதிர்பார்த்த நன்மை அதிகரிக்கும். குடும்பத்திற்கான பண தேவை அதிகரிக்கும்.
தாய் வழி உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். புத்திரர் ஆர்வம் மிகுந்த செயல்களில் அதிக நன்மையை பெறுவர். விவகாரம் அணுகாத சுமூக வாழ்வு அமைந்திடும். மனைவி கருத்திணக்கம் கொள்வார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பண வரவும் கூடும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவீர்கள். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
சந்திராஷ்டமம் : 8.11.19 காலை 7:24 மணி – 9.11.19 நாள் முழுவதும்.
பரிகாரம் : முருகன் வழிபாடு தைரியம் வளர்க்கும்.

கன்னி: சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நன்மை உண்டாகும். எவரிடமும் பேசுவதில் நிதானம் பின்பற்றவும். உடன் பிறந்தவர் அன்பு பாராட்டுவர்.

வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். புத்திரர்கள் விரும்பி கேட்ட பொருட்கள் வாங்கி தருவீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு சீரான ஓய்வு அவசியம். மனைவியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருவதால் ஒற்றுமை பலம் பெறும். தொழிலில் அரசு சார்ந்த உதவி பெறலாம். பணியாளர்கள் பணியை எளிதாக நிறைவேற்றுவர். பெண்கள் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சி பெறுவர்.
பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

துலாம்: சந்திரன், கேது, சுக்கிரன், சனீஸ்வரரால் நற்பலன் ஏற்படும். புதியவர்களின் அன்பு நெகிழ்ச்சி தரும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு.

புத்திரர் பெற்றோரின் கருத்துகளை ஏற்று கொள்வர். நண்பரிடம் எதிர் கால நலன் குறித்து பேசுவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் ஜாதகம் யோக பலன்களை தரும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். தொழில், வியாபாரம் அதிர்ஷ்டகரமாக செழித்து பணவரவு கூடும். பணியாளர்கள் பணி இலக்கு எளிதில் நிறைவேற்றுவீர்கள். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளிலும் ஆர்வம் கொள்வர்.
பரிகாரம் : ஐயப்பன் வழிபாடு வெற்றியளிக்கும்.

விருச்சிகம்: குரு, சுக்கிரன், செவ்வாய், சந்திரன் சுப பலன் வழங்குவர். சில செயல்களில் இருந்த தாமதம் விலகும்.
பணிகளை உத்வேகமுடன் நிறைவேற்றுவீர்கள். குடும்ப தேவை தாராள பண செலவில் பூர்த்தியாகும். வாகனத்தில் கூடுதல் வசதி பெற சில மாற்றம் செய்வீர்கள்.புத்திரரின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பூர்வ சொத்தில் அளவான பண வரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் அன்பு, பாசம் மனதில் நம்பிக்கையை தரும். தொழிலில் உள்ள அனுகூலத்தை கவனமுடன் பாதுகாக்கவும் பணியாளர்கள் கால அவகாசத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் பண செலவில் சிக்கனம் வேண்டும். மாணவர்கள் படிப்பில் எளிய நடையை பின்பற்றுவர்.
பரிகாரம் : பசு வழிபாடு செல்வ வளம் தரும்.

தனுசு: சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் அதிர்ஷ்ட பலன் தருவர். திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவீர்கள்.

உடன் பிறந்தவர் செயலை குறை சொல்ல வேண்டாம். வீடு, வாகனத்தில் பராமரிப்பால் பண செலவு கூடும். புத்திரரின் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். கவனித்து நல்வழி நடத்துங்கள். விருப்பமான உணவு உண்டு மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். நண்பருடன் முக்கியமான விஷயம் பேசுவீர்கள். மனைவி உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெற கூடுதல் பயிற்சி உதவும்.
பரிகாரம் : அம்பிகை வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

மகரம்: சூரியன், புதன், ராகு, சுக்கிரன் அளப்பரிய நன்மைகளை வழங்குவர். உறவினர்களிடம் கருத்து வேற்றுமை விலகி அன்பு, பாசம் வளரும்.

வெளியூர் பயணத்தில் தகுந்த பாதுகாப்பு வேண்டும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கி தர தாராள பண வசதி துணை நிற்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சொத்து தொடர்பான இடையூறு விலகும். மனைவி குடும்ப நலன்களை அக்கறையுடன் பாதுகாத்திடுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவி செய்வர். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் தேர்ச்சி கூடும்.
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

கும்பம்: குரு, கேது, சந்திரன், சனீஸ்வரரால் நற்பலன் கிடைக்கும். உங்களை அறியாதவரிடம் சொந்த விஷயம் பேச வேண்டாம்.

தம்பி, தங்கை தரும் உதவி உற்சாகம் தரும். வாகன பயன்பாடு திருப்திகர அளவில் இருக்கும். புத்திரர் செயல் திறனில் மேம்பட கூடுதல் பயிற்சி உதவும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பணவசதிக்கேற்ப வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். மனைவியின் ஆலோசனை குடும்பத்திற்கு நன்மைகளை தரும். தொழில், வியாபார போட்டியை மாற்று உபாயத்தினால் சரி செய்வீர்கள். பணியாளர்களின் பணி இலக்கு நிறைவேற தாமதமாகலாம். பெண்கள் கணவரின் அன்பு, பாசத்தில் மனம் மகிழ்வர். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் பெற ஆர்வம் வளரும்.
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வம் தரும்.

மீனம்: புதன், சுக்கிரன், சந்திரன் அனுகூலமாக உள்ளனர். மனதில் உருவான திட்டம் செயல் வடிவம் பெறும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

வாகன பயன்பாடு திருப்திகர அளவில் இருக்கும். புத்திரர் வேலை, அறிவு திறனில் மேம்படுவர். பூர்வ சொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்தவும். விவகாரங்களில் தீர்வு பெற மாற்று உபாயம் தேவைப்படும். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிக்கு தேவையான உதவி கிடைக்கும். பணியாளர் அதிக வேலை வாய்ப்பை ஏற்று கொள்வர். பெண்கள் பிள்ளைகளின் உயர்குண நலன் சிறக்க உதவுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.