என் கணவனுடன் நீ எப்படி தனியாக சினிமாவுக்கு போவ? கையும் களவுமாக பிடித்த மனைவியின் வீடியோ!

இந்தியாவில் தனது கணவரை அழைத்து கொண்டு திரைப்படத்துக்கு சென்ற பெண்ணை கையும் களவுமாக பிடித்த மனைவி அவரை அடித்து உதைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து திரைப்படம் காண திரையரங்குக்கு செல்வதை கண்டுபிடித்து தனது தங்கையுடன் சேர்ந்து அவரை பின் தொடர்ந்தார்.

பின்னர் திரையரங்கம் வாசலில் கணவருடன் இருந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்த மனைவி மற்றும் அவர் சகோதரி அவரை தலைமுடியை பிடித்து அடித்து உதைத்தனர்.

என் கணவரை அழைத்து கொண்டு நீ எப்படி சினிமாவுக்கு செல்லலாம் என மனைவி அடித்தார்.

இதை தடுக்க கணவர் முயன்ற போது அவரையும் இருவரும் சேர்ந்து அடித்தனர்.

அரைமணி நேரத்துக்கும் அதிகமாக அப்பெண்ணை இருவரும் அடித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அப்பெண்ணை மீட்டனர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பிலான வீடியோ வைரலாகியுள்ளது.