திருமண வீட்டில் மணமகனான மாமனார்! திடீர் குழப்பத்துக்கு காரணம் என்ன? வைலராகும் வீடியோ!

image_pdfimage_print

திருமண மேடையில் மணமகனின் தந்தையை மணமகன் என ஸ்டாலின் கூறிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பொது மேடைகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் அடிக்கடி சொல்ல வரும் விடயத்துக்கு பதிலாக வாய் தவறி வேறு விடயத்தை சொல்லி விடுகிறார்.

இதையடுத்து இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி விடுகிறது.

இரு தினங்களுக்கு முன்னர் கூட திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக பேசும் போது பெரியார் சிலை என மாற்றி கூறினார்.

இந்த சூழலில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின் மேடையில் பேசும் போது மணமகன் பெயரை காசி விஸ்வநாதன் என கூறினார்.

ஆனால் அது மணமகனின் தந்தையின் பெயராகும், இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் குழம்பினர். பின்னர் சுதாரித்து கொண்ட ஸ்டாலின், காசி விஸ்வநாதனின் மகன் சுப்ரமணியன் தான் மணமகன் என கூறி நிலைமையை சமாளித்தார்.

இதையடுத்து மணப்பெண்ணின் மாமனாரை மணமகன் என ஸ்டாலின் கூறிவிட்டாரே என இது தொடர்பிலான வீடியோ சமூகவலைதளத்தில் கிண்டலோடு வைரலாகி வருகிறது.