காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பெண்ணின் கருப்பையில் இருந்து 18 கிலோ எடை கொண்ட க ட்டியை மருத்துவர்கள் அ றுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 38 வயது கவிதா கலாம் மூச்சு விட முடியவில்லை, வயிற்று வலி என கூறி மருத்துவரை நாடியுள்ளார். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கருப்பை க ட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் அதை உடனே அகற்றவில்லை என்றால் அவரது அடிவயிற்றை சிதைத்து விடவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து நாள் குறித்த மருத்துவர்கள் குழு, அவரது கருப்பையில் இருந்து சுமார் 18 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றியுள்ளனர்.

கணவனை இழந்த கவிதாவால் கடந்த 7 மாதமாக தமக்கு ஏற்பட்டு வந்த வலியை தாங்க முடியாமல் தவித்து வந்ததாகவும், ஆனால் சிகிச்சைக்கான செலவை எண்ணி நாட்கள் கடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
