வெளிநாட்டில் சாதரண டிரைவருக்கு அடித்த மிகப் பெரிய அதிர்ஷடம்… என்ன கிடைத்திருக்கு தெரியுமா?

வெளிநாட்டில் வங்கதேசத்தை சேர்ந்த நபருக்கு கடந்த வாரம் தான் குழந்தைகள் பிறந்த நிலையில், இப்போது அவருக்கு நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

வங்கதேசத்தின், சிட்டாகாங்கை சேர்ந்தவர் Mohammed Suman Haje’s.36 வயதான அபுதாபியில் குடும்பத்தின் ஒருவருக்கு டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் Aldar Malls-ல் நடக்கும் மில்லியனராக இருங்கள் என்று குலுக்கலில், அவருக்கு Dh 1 மில்லியன் மதிப்புமிக்க கிப்ட் கார்ட் விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த உலகில் நான் தான் அதிர்ஷ்டக்கார தந்தையாக இருப்பேன். எனக்கு அபுதாபி WTC-யில் அழைப்பு வந்தது. அவர் சொன்ன தகவலை கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் எனக்கு திருமணம் நடந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு இரட்டை குழந்தைக பிறந்தது. ஒரு டிரைவராக இருந்த நான் தற்போது Dh 1 மில்லியன் மதிப்புமிக்க பணக்காரன் என்றே கூறலாம்.

நான் கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்திற்கு டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். தற்போது வரை டிரைவராகவே என் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

விழுந்த இந்த பரிசை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட போது, நான் இதை என் வருங்கால குழந்தைகளை கருத்தில் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று இருக்கிறேன். அதுமட்டுமின்றி இந்த பரிசை என்னுடைய மனைவி, சகோதரிகள், சகோதரர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வேன்.

கடந்த வாரம் எனக்கு இரட்டை குழந்தை, இப்போது இப்படி ஒரு அதிர்ஷ்டம், நான் உண்மையிலே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.