கோடிக்கணக்கான தங்க, வைர நகைகளுடன் சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்ட கோடீஸ்வரர் யார்? வெளியான உண்மை!

குவைத்

குவைத்தை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் உயிரிழந்ததாகவும், கோடீக்கணக்கான நகைகளுடன் சேர்த்து அவர் புதைக்கப்பட்டதாகவும் வெளியான புகைப்படங்கள் குறித்த உண்மை தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் Suraj Kiran Travels என்ற பெயரில் உள்ள நபர் புகைப்படங்களுடன் வெளியிட்ட ஒரு பதிவு பெரியளவில் வைரலானது.

அதில் குவைத்தில் உள்ள மிக பெரிய கோடீஸ்வரரான Nassi Al Kharki உயிரிழந்துவிட்டார். அவரின் பொக்கிஷங்கள், நகைகள், ஆபரணங்களை, கார்களை பாருங்கள், அவர் போகும் போது எதையும் கொண்டு செல்ல முடியவில்லை, இதை எல்லோருக்கும் நினைவூட்டுகிறேன் என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவை பலரும் தங்கள் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கினார்கள்.

ஆனால் சவப்பெட்டியில் சடலமாக கிடந்த நபர் உண்மையில் குவைத்தின் நம்பர் 1 கோடீஸ்வரர் கிடையாது என தற்போது தெரியவந்துள்ளது.

அந்த நபரின் பெயர் Sheron Sukhedo எனவும் அவர் Trinidad and Tobago நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர் எனவும் தெரியவந்துள்ளது.

Sheron கடந்த 2018ஆம் ஆண்டு சுட் டு கொ ல்லப்பட்டார், பின்னர் அவர் சடலம் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு உடல் முழுவதும் நகைகள் அணிவிக்கப்பட்டு அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் குவைத்தில் Nassi Al Kharki என்ற பெயரில் பெரிய கோடீஸ்வரர் யாரும் இல்லை எனவும் போர்ப்ஸ் பட்டியல் மூலம் உறுதியாகியுள்ளது.