பிச்சை எடுக்கும் மூதாட்டி….. பைக்குள் இருந்த நகை, பணம் மற்றும் இன்னும் பல.! புகைப்படங்கள்!

புதுச்சேரியில், கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் மூதாட்டியிடம் பணம், நகைகள் இருப்பதை கண்டு பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு ஏராளமானவர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்த இன்று மாநகராட்சி ஊழியர்கள் சென்றுள்ளர்.

அப்போது, ஒரு மூதாட்டியை அப்புறப்படுத்தும் போது பையில் இருந்து நகை, பணம் ஆகியவற்றை கீழே விழுந்துள்ளது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்ப இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டியின் பெயர் பர்வதம் என்பதும் அவர் கணவன் இறந்தது முதல் அப்பகுதியில் பிச்சை எடுப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதில், 15ஆயிரம் ரூபாய் பணமும், தங்க காதணி, வங்கி சேமிப்பு புத்தகம் (அதில் ஒரு லட்சம் பணம்), முதியோர் உதவி தொகைக்கான அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை இருந்ததன் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.