100 நாளில் டேமெஜான காதல் ஜோடியின் பெயரை சரிக்கட்டதான் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாம் அந்த பிரபல டிவி சேனல்.

தனியார் டிவி சேனல் ஒன்றில் 100 நாட்கள் வீட்டுக்குள் குடும்பமாக இருக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பல மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் காதல் ஒரு டிப்பார்ட்மென்ட்டாகவே இருந்து வருகிறது.

ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் ஜோடி அந்த நிகழ்ச்சயின் மூலம் வைரலாவது வாடிக்கை. காதல் ஜோடி மக்களின் மனதில் இடம் பிடித்தால் அவர்களை புகழ்ந்து, அவர்களின் காதலுக்கு ஆதரவாக டிவிட்டுவார்கள் மக்கள்.

பிடிக்காவிட்டால் சமூக வலைதளங்களில் வச்சு செய்வார்கள். குடும்பத்தினரை கூட விட்டு வைக்காமல் இழுத்துபேசி மானத்தை வாங்கிவிடுவார்கள்.

இதனால் அனைத்து மொழியிலும் 100 நாள் நிகழ்ச்சியில் மலரும் காதலுக்கு எதிர்ப்பும் ஆதரவும் கலந்தே உள்ளது. இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு ஜோடி காதலிப்பதாக கூறி பெரும் பிரபலமானது.

வீட்டுக்குள் இருக்கும் வரை உருகி உருகி காதலித்த அந்த ஜோடி வெளியே வந்த பிறகு வாயே திறக்கவில்லையாம். சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றியதையும் நாயகனின் லட்சணத்தையும் பார்த்து நாயகி ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பேர் கெட்டது கெட்டதுதானே.. கடைசி வரை பேரை கெடுத்து நிகழ்ச்சிக்கு ரேட்டிங் வாங்கிக்கொடுத்ததால் தனது பெயரை கொஞ்சம் சரிகட்டுமாறு நாயகி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாம்.

இதனால் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த டிவி சேனல் நாயகிக்கு சொந்த பந்தத்தால் புகழ் பத்திரம் வாசிக்க வைத்ததாம். நாயகி குறித்து நல்ல மாதிரியாக பேசி கண்ணீர்விட வைத்தார்களாம். அந்த நிகழ்ச்சியில் கூட நாயகி நாயகனுடன் அதிகமாக பேசவில்லையாம்.

காதல் நாயகிக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை அறிந்த டிவி சேனல் அவரை அப்படியே அமுக்கிப்போடதான் இப்படி வளைந்து கொடுக்கிறதாக கூறுகிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர். ஆனால் 100 நாட்கள் நடந்ததை பார்த்த மக்களின் மனதை வெறும் ஒன்று இரண்டு மணிநேரத்தில் மாற்ற முயற்சிப்பதெல்லாம் சுத்த வேஸ்ட் என்கிறார்கள் ரசிகர்கள்.
