தாய்லாந்தில் தேசிய பூங்கா ஒன்றில் சுற்றுலாப் பயணிகளின் கார் மீது ஏறி அமர்ந்து உட்கார முயன்ற வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாய்லாந்தில் காவோ யாய் என்ற தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்கா வனவிலங்குகளின் தாயாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இங்கு மான்கள், கரடிகள், யானைகள் மற்றும் ஏராளமான பறவை இனங்களைக் காணலாம். பூங்காவின் உள்ளே அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் உள்ளது.
இதனால் தாய்லாந்திற்கு வருபவர்கள், கண்டிப்பாக இந்த பூங்காவிற்கு விசிட் அடிக்காமல் இருக்கமாட்டார்கள், இந்நிலையில் குறித்த பூங்காவிற்கு சுற்றுலாப்பயணிகளின் கார் ஒன்று சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்தது.
உள்ளே இருந்த சுற்றுலாப்பயணிகள் பூங்காவின் அழகை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கிருந்த யானை, ஒன்று காரின் மீது ஏறி உட்கார முயன்றது.
இதற்காக காரின் முன்பக்கத்தை முதலில் தாக்கியது, அதன் பின் தன்னுடைய முன்னால் இருக்கும் இரண்டுகளை சற்று நீட்டி, அதற்கிடையில் கார் இருக்கும் படி உட்கார முயன்றது.
கார் நொறுங்கிவிடுமோ? உள்ளே இருந்தவர்கள் பயந்து கொண்டிருந்த போது, யானை அசந்த சில நொடிகளில் காரை ஓட்டிய நபர் அசுர வேகத்தில் எடுத்து வர, காரில் இருந்த அனைவரும் தப்பினர்.
இந்த வீடியோவை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட, தற்போது வைரலாகி வருகிறது.
