ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக முன்னிலை வகிக்கும் சஜித்!

image_pdfimage_print

ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்கள் உள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலை வெறுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ முன்னணி வகித்தார்.

நேற்று மாலை கிடைத்த கருத்து கணிப்பு ஒன்றிக்மைய சஜித் பிரேமதாஸ முன்னிலை வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

90000 – 100000 வாக்குகளில் சஜித் கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிப்பார் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.