திருமணமான ஒரு வாரத்தில் மனைவியை விட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன்.. அடுத்து நடந்த எதிர்பாராத சம்பவம்!

தமிழகத்தில் பெற்றோரால் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட பள்ளி மாணவி, தோழியின் காதலுக்கு செய்த உதவியால் தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜமாணிக்கம் – கருப்பாயி தம்பதியின் மகள் அன்பு.

12ஆம் வகுப்பு மாணவியான இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஜெகதீசன் என்பவருடன் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் முடிந்த ஒரே வாரத்திலேயே கணவன் ஜெகதீசன் வேலைத்தேடி சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் தாய் வீட்டில் தங்கி கழுத்தில் தாலியுடன் அன்பு பள்ளிக்கு சென்று வந்தாள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அன்பு வீட்டில் பூ ச்சி ம ருந்து கு டித்து தற்கொ லை செய்து கொண்டார்.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அன்புவுடன் பள்ளியில் படிக்கும் தோழி ஒருவர் தீனா என்ற இளைஞரை காதலித்தார்.

இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அதற்கு அன்புவின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது.

சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டதால், தாம்பத்ய வாழ்க்கை குறித்து முறையான புரிதல் இல்லாத அன்பு தனது தோழிக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பாமல், காதல் ஜோடியுடன் தன்னுடன் படிக்கின்ற மற்றொரு தோழியையும் அழைத்துக் கொண்டு 4 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு தனது தோழிக்கு அன்பு திருமணம் நடத்தி வைத்தார்.

பின்னர் தோழி, காதலனுடன் தலைமறைவாக அன்பு தனது வீட்டுக்கு தாமதமாக வந்தார்.

பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும், தனது மகள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு தோழியின் தந்தை கேசவன் விசாரித்த போது அன்புவும், தனது மகளும் பள்ளியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்ற விவரம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கேசவன் அன்புவின் வீட்டிற்குச் சென்று தனது மகள் 18 வயது நிரம்பாத சிறுமி, அவள் உன்னுடன் வந்துள்ளாள், தற்போது அவளை காணவில்லை, பொலிசில் உன் மீது புகார் செய்ய போகிறேன் என கூறி மிரட்டினார்.

இதனால் பயந்த போன அன்பு தற்கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.