வெறும் 2 நிமிஷத்தில் லட்சாதிபதியான பெண்!.. சந்தோஷத்தில் திக்குமுக்காடிய தருணம்!

image_pdfimage_print

கேரளாவில் லொட்டரி டிக்கெட் வாங்கிய இரண்டு நிமிஷத்தில் அந்த டிக்கெட்டுக்கு 60 லட்ச ரூபாய் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார் லேகா பிரகாஷ் என்ற பெண்.

கேரளாவின் ஆலப்பழா மாவட்டத்தில் வெள்ளப்பள்ளி காலனியில் வசித்து வரும் தம்பதி பிரகாஷ்- லேகா பிரகாஷ், இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

லொறி டிரைவரான பிரகாசுக்கு சமீபத்தில் விபத்து நடந்ததால், அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக தான் செய்து வந்த லொட்டரி டிக்கெட் விற்பனை தொழிலை நிறுத்தியுள்ளார் லேகா.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2.58 மணியளவில் 12 லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார், 3 மணிக்கு குலுக்கல் நடந்த நிலையில் லேகா வாங்கிய டிக்கெட்டுக்கு 60 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

அத்துடன் 8,000 ரூபாய் மதிப்புள்ள 11 பரிசு பொருட்களும் கிடைத்துள்ளது, இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளனர் லேகாவின் குடும்பத்தினர்.

இந்த பணத்தை கொண்டு சொந்த வீடு கட்ட ஆசைப்படும் லேகா, அதிகாரிகளிடம் டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறாராம்.